கொரோனா வைரஸ் என்று சொல்லக் கூடாது.. மாஸ்க் அணிந்தால் சிறை! எந்த நாட்டில் தெரியுமா?

கொரோனா வைரஸ் என்று சொல்லக் கூடாது.. மாஸ்க் அணிந்தால் சிறை! எந்த நாட்டில் தெரியுமா?

Loading...

துர்க்மேனிஸ்தான் என்ற நாட்டில் பொது இடத்தில் மக்கள் முகக்கவசம் அணிந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1834 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது.

Loading...

உலகின் சூப்பர் பவர் எனப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகள் கூட கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் ஆட்டம் கண்டுள்ளன. ஆனால் மத்திய ஆசியாவில் உள்ள நாடான சிறிய தீவுக்கூட்டமான துர்க்மேனிஸ்தானில் இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்தாலும் அந்நாட்டு மக்களுக்கு அது சந்தோஷத்தை தரவில்லை.

காரணம் அந்நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்புக்காக முகக்கவசம் கூட அணிந்து செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அந்த நாட்டின் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ், கொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்த தடை விதித்துள்ளார். இது பொது மக்களுக்கு மட்டுமல்ல… ஊடகங்களுக்கும்தான். பொது இடத்தில் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணிந்து சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளில் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் உள்ள துர்க்மேனிஸ்தான்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*