நேற்று சொன்னோம் இன்று நடந்துவிட்டது கொரோனாவை பரப்பியவர்கள் யாரும் தப்பிக்க முடியாது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

நேற்று சொன்னோம் இன்று நடந்துவிட்டது கொரோனாவை பரப்பியவர்கள் யாரும் தப்பிக்க முடியாது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ¡

Loading...

டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் இந்தியாவில் கொரனோ தொற்று அதிக அளவில் பரவியிருப்பது உறுதிசெய்யபட்ட நிலையில் மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன் எதிரொலி தற்போது தெரியவந்துள்ளது.

டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் உட்பட சந்தேகத்திற்கு விதமாக இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் என 960 நபர்களின் விசாவினை உள்துறை அமைச்சகம் கேன்சல் செய்தது இதில் பலர் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பதும் அதில் சிலர் சுற்றுலா விசாவில் சட்டவிரோதமாக வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Loading...

இந்நிலையில் நேற்று காலை 10.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பாடிக் ஏர்லைன்ஸின சிறப்பு விமானம் புறப்பட தயாரானது. இதில் தமிழகத்தில் தங்கியிருந்த 137 மலேசியர்கள் செல்ல தயாராக இருந்தனர்.

இவர்களில் 127 பேரை மலேசிய தூதராக அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை , சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை நடத்தப்பட்டது. மீதமுள்ள 10 மலேசியர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் என்பது தெரியவந்தது. இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளார்கள்.

அங்கிருந்து தென்காசி சென்று உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்10 பேர் மீதும் போலீசார் 8 பிரிவுகளில் ( அரசு உத்தரவை மீறுதல், உயிர்கொல்லி தொற்று நோயை பரப்புதல், வெளிநாட்டவர் தடையை மீறி தங்குதல் தடுப்பு சட்டபிரிவு உள்பட) வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான 10 பேரும் பூந்தமல்லி கொரோனா சிறப்பு சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே 10 பேர் யார் யாரை சந்தித்தார்கள். எங்கு தங்கியிருந்தார்கள் என்ற தகவலை தென்காசி மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது மேலும் யாரெல்லாம் அவர்களுக்கு உதவினார்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற தகவலையும் திரட்டி உள்ளது.

இதன்மூலம் மத்திய அரசு தெளிவாக ஒரு விவகாரத்தை முன்னெடுத்துள்ளது, டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை முழு விசாரணைக்கு பின்னரே அவர்கள் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், அத்துடன் சுற்றுலா விசாவில் வந்து இந்தியாவிற்குள் மதம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிர்வாகிகள் வெளிநாட்டவர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கிம் வகையில் அரசு செயற்பட்டுவருவது உறுதியாகியுள்ளது.

இது அரசு எடுத்துவரும் வெளிப்படையான நடவடிக்கை என்றும் மறைமுகமாக இன்னும் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நாம் குறிப்பிட்டுருந்த நிலையில் தப்லீக் நிர்வாகிகளை அரசு தொடர்ந்து கண்காணித்து கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*