வாட்டாள் நாகராஜை வெல்வாரா தமிழர் சரவணா? பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் இதோ கர்நாடக இடைத்தேர்தல் நிலவரம் !!

கர்நாடக மாநிலத்தில் 15 எம் எல் ஏ கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது, அதில் சிவாஜி தொகுதியில் தமிழர் சரவணா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து வாட்டாள் நாகராஜ் எனும் கன்னட அமைப்பை சேர்ந்தவரும் போட்டியிடுகிறார் இதனால் அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Loading...

இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கர்நாடகாவில் பாஜக மெஜாரிட்டி பெற்றுவிடும் என்றாலும் இடைத்தேர்தல் நடைபெறும் சிவாஜி நகர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற வெறியுடன் வேலை
செய்துவருகிறார்கள்.

கர்நாடக வாழ் தமிழர்கள் மத்தியில் சிவாஜிநகர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற ஆசை
இருக்கிறது. ஏனென்றால் இப்போது சிவாஜிநகர் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக போட்டியிடுபவர் ஒரு தமிழர். அவர் பெயர் பெயர் சரவணா.

Loading...

கர்நாடகாவில் சுமார் 1 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 40 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அரசியல் ரீதியாக தமிழர்கள் உரிய அங்கீகாரம் பெறாமலேயே இருக்கிறார்கள் காரணம் மொழி சண்டை காவேரி பிரச்சனை .

பெங்களூரில் 28 சட்டமன்ற தொகுதிகளில் 23 சட்டமன்ற தொகுதிகளில் தமிழர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கின்றனர் ஆனால் இவற்றின் எம்எல்ஏக்களில் ஒருவர் கூட தமிழர் அல்ல.

சி.வி. ராமன் நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர், ஹனூர், ஷாந்தி நகர், சிவாஜிநகர் ஆகிய 6 தொகுதிகளில் தமிழர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.2004 வரை இவற்றில் சில தொகுதிகளில் தமிழர்களே வெற்றி பெற்று வந்தார்கள்,
ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி அல்ல 80 சதவீதம் தமிழர்கள் உள்ள கோலார் தங்க வயல் தொகுதியில் கூட தமிழர்கள் வெற்றிபெற முடியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கோலார் தங்க வயலில் 2018 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் அன்பு வெறும் 1024 ஓட்டுக்களை மட்டுமே பெற்று
டெபாசிட்டை இழந்தார் என்றால் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

இப்படி ஒரு தமிழர் கூட இல்லாத கர்நாடக
சட்டமன்ற த்தில் இப்பொழுது ஒரு தமிழர் நுழைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.அதை உருவாக்கி இருக்கிறது பிஜேபி.சிவாஜி நகர்
தொகுதியில் அதிகளவில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.அதனாலாயே அங்கு காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

இருந்தாலும் பாஜக 2 முறை சிவாஜி நகர்
தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது
அதனால் இப்போது எப்படியும் வெற்றி
பெற்றே தீர வேண்டும் என்று பெங்களூரு
மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான
சரவணாவை இறக்கிவிட்டுள்ளது பாஜக

பாஜகவிற்கு சிவாஜி நகர் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ள முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரோஹன் பெய்க் முழுஆதரவை அளித்துள்ளார். ரோஹன் பெய்க் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற துணை நின்றார்.

முஸ்லிம்கள் வாக்கு அதிகமாக உள்ள சிவாஜி நகர் தொகுதியில் முஸ்லிமான இவரையே பிஜேபி வேட்பாளராக நிறுத்தும் என்று எல் லோரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இவர் மீது உள்ளவழக்கை முன்வைத்து பாஜக இவரை களம் இறக்காமல் தமிழரான சரவணாவை நிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் சுமார் 2 லட்சம் வாக்குகள் உடைய சிவாஜி நகர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் உள்ள முஸ்லிம் வாக்குகள் சிதறி பாஜக வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது.

அதே மாதிரி கன்னட மொழி வெறியரான வாட்டாள் நாகராஜ் வேறு தற்போது சிவாஜி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.எனவே தீவிர கன்னடர்களின் வாக்குகளை அவர் சிறிதளவு பெற்றாலே போதும் தமிழரான பாஜகவின் சரவணா சிவாஜி நகர் தொகுதியின் எம்எல்ஏவாகி விடுவார்.

சரவணா சிவாஜி நகர் எம்எல்ஏவாகி விட்டால்
நீண்ட நாட்களுக்கு பிறகு கர்நாடக சட்டமன்றத்தில் நுழைந்த தமிழர் என்கிற பெருமையை பெற்று விடுவார்.சிவாஜி நகரில் சரவணா சாதிப்பார் என்றே இப்போதைய கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றே தற்போதைய களநிலவரங்கள் கூறுகின்றன.
credit -திரு – விஜயகுமார்

பாஜக கர்நாடக, மஹாராஷ்டிரா, என பல மாநிலங்களில் தமிழர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3902 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*