Connect with us

சிறப்பு அரசியல்

வண்ணாரப்பேட்டையில் தடியடி நடந்த 20 நிமிடத்திற்குள் திருச்சியில் 1000 பேர் கூடியது எப்படி? 6 தனிப்படை மும்பையில் இருந்து வருகை?

சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல் நடைபெற்றது அதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் இணை கமிஷனர் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட முயன்ற 40 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தடியடி நடத்திய அடுத்த நிமிடத்தில் சென்னையின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர், சொல்லிவைத்து போல் அடுத்த சில நிமிடங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது, சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் அடுத்துள்ள திருச்சியில் 20 நிமிடங்களுக்குள் 1000 மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த சூழலில்தான் நிச்சயம் இதன் பின்னணியில் வெறும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்லாமல், ஏதோ மிக பெரிய சதி திட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரவுள்ள சூழலில் வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தமிழக காவல்துறையை எச்சரித்ததாக கூறப்படும் நிலையில்..

Loading...

அதனை முன்வைத்துதான் சென்னையில் அடுத்த 15 நாட்களுக்கு போராட்டம் நடத்த தடை விதித்து காவல்துறை உத்தரவுட்டதாகவும், ஆனால் அதனை மீறி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று இரவு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும் உளவு பிரிவு கண்டறிந்துள்ளது, இதனையடுத்து முழுமையான விசாரணை நடத்த 6 தனி பிரிவு தமிழகம் வந்துள்ளதாகவும், கலவரத்தை தூண்டி விடும் நபர்கள் இயக்கங்கள் குறித்து விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Loading...

©TNNEWS24

Loading...

Trending