தனுஷ் படத்தின் போஸ்டரும் காப்பிதான் – நெட்டிசன்கள் கேலி !

தனுஷ் படத்தின் போஸ்டரும் காப்பிதான் – நெட்டிசன்கள் கேலி !

தனுஷ் படத்தின் போஸ்டரும் காப்பிதான் – நெட்டிசன்கள் கேலி !

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர், பிரபல ஓவியத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியிடுவது தனியே கவனத்தை ஈர்த்து வருகிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. அன்று ஒருநாள் அவர்களின் ரசிகர்கள் அதைக் கொண்டாடித் தீர்த்துவிடுகின்றனர்.

Loading...

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரின் நடுவில் தனுஷ் அமர்ந்திருக்க, அவருக்கருகில் வரிசையாக பலர் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. அட்டகாசமாக இருந்த அந்த போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது.

Loading...

இந்நிலையில் அந்த போஸ்டர் இயேசுநாதர் பற்றிய ஓவியம் ஒன்றில் இருந்து தழுவப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். உலகின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவரான லியானர்டோ டாவின்ஸியின் புகழ்பெற்ற ஓவியமான த லாஸ்ட் சப்பர் (The last Supper) என்ற ஓவியத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லி இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் போஸ்டர்கள் இதுபோன்ற காப்பி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி உள்ளது. ஏற்கனவே மாஸ்டர் மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் போஸ்டர்கள் இதுபோல சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *