Connect with us

#24 Exclusive

எச்சரிக்கை விடுத்தும் அடங்காத சர்ச் நிர்வாகம், விநாயகர் சிலையை வைத்து தெறிக்க விட்ட இந்து முன்னணி !

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் மலையடி பஞ்சாயத்தில் திடீர் என சர்ச்கள் உருவாவதும் குடியிருப்பு பகுதிகளிலேயே தொழுகை கூடங்கள் நடத்தப்படுவதும் வழக்கமான ஒன்றாக தினமும் அரங்கேறிவருகிறது, அந்த வகையில் கிறிஸ்தவ அமைப்பிற்கு சொந்தமான இடத்தில் சில மாதங்களாக சர்ச் போன்ற கட்டிடம் கட்டப்படுவதாக சந்தேகித்த இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் காவல்துறையிடம் சென்று புகார் அளித்தனர்.

ஆனால் அப்போதய கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகம் நாங்கள் சர்ச் கட்டவில்லை என்றும கூறி வந்தது இந்நிலையில் இன்று காலை திடீர் என யேசு, மதம், அந்தோனியார் சிலைகள் நிறுவப்பட்டு அந்த கட்டிடம் சர்ச்சாக மாற்ற பட்டிருப்பதை அறிந்த இந்து முன்னணியினர் காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் கொடுத்தனர் ஆனால் அவர்கள் வருவதற்கு சற்று காலதாமதம் ஆனது.

மேலும் சர்ச் நிர்வாகம் எங்கள் இடத்தில் கட்டுகிறோம் என திமிராக பதில் அளித்துள்ளனர், இதனால் அந்த பகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சோமன் தலைமையில் கூடி அதற்கு எதிராக உள்ள வீட்டில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர், இதனால் பதறியடித்து கொண்டு காவல்துறை, வருவாய்த்துறையினர் அங்கு வந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்றினர்.

Loading...

போராட்டத்தில் மட்டும் ஈடுபடாமல் விநாயகர் சிலையை வைத்து நூதன முறையில் பூஜை செய்து திடீர் சர்ச்சை காலி செய்ய வைத்த இந்து முன்னணி அமைப்பினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர், சமீப காலமாக தமிழகத்தில் இந்துக்கள் ஒற்றுமை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Loading...

மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் விளவாங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லபட்டது.
விளவாங்கோடு வட்டாட்சியர்
புலன்தார தாஸ் களியாக்காவிளை இன்ஸ்பெக்டர் சுமதி பளுகல் கிராம நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.மற்றும் மேல்புறம் ஓன்றிய செயலாளர் ராஜன் இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.

©TNNEWS24

Loading...

Trending