அந்த வார்த்தையை சொல்லி துரைசாமி அசிங்க படுத்திட்டாரே !! ஸ்டாலின் அப்செட் !!

திமுகவில் மூத்த தலைவராகவும் துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த வி பி துரைசாமி இன்று சென்னை பாஜக தலைமையகம் கமலாலயத்தில் பாஜக தலைவர் முருகன் மற்றும் இல. கணேசன் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைத்து கொண்டார்.

Loading...

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது ஏன் என துரைசாமி பேசியது, தற்போது திமுக மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை உண்டாகியுள்ளது, செய்தியாளர்களை சந்தித்த துரைசாமி பேசியது பின்வருமாறு :- அவரைத் தொடர்ந்து வி பி துரைசாமி செய்தியாளர்களிடம் பேசினார். ”நான் வேறு கட்சியில் இருந்து இருந்தாலும், நானும் தம்பி முருகனும் வைணவ குலத்தைச் சேர்ந்தவர்கள். பெருமாளை வணங்கக் கூடியவர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் விரதமிருந்து வழிபாடு நடத்தி அதன்படி வளர்ந்தவர்கள்.

மிகவும் இறை பக்தி உள்ளவர்கள். தமிழ் கடவுளான முருகன் பெயரை வைத்திருக்கிறார். தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது இப்படி மாறி இருக்கிறது. தமிழர்கள் அதிகம் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது தவறு என்றால் நான் என்ன சொல்வது?
நான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் யாருடைய மனதையும் புண்படுத்தி பேசுவதை விரும்பாதவன். தேசம்தான் முக்கியம். இந்த தேசத்தை முன்னிறுத்துகின்ற தலைவர் யார் என்று பார்த்தால், இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் கூட, இந்தியாவை முன்னேறும் நாடு என்றுதான் சொல்ல முடியும்.

Loading...

முன்னேறிய நாடு என்று சொல்ல முடியாது. முன்னேறிய நாடு என்று சொல்லக்கூடிய அமெரிக்க ஜனாதிபதியே பாரத பிரதமர் மோடியின், உறுதுணை இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.
அந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார், என்று சொன்னால் என்னைப் போன்றவர்கள், அவருடன் தானே இருக்க வேண்டும். அதுதானே நியாயம். ஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை.

என் உழைப்பை திருடி விட்டார்கள். என் உழைப்புக்கு ஊதியம் இல்லை. முருகன் 45 வயது இளைஞர், நான் வயதானவர்களுடன் பழகி, பழகி நானும் இப்படி ஆகிவிட்டேன். இப்போது ஒரு இளைஞரிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களிடம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய வரவேற்புகளைப் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டேன். வார்த்தைகள் வரவில்லை” என்றார்.

இதில் துரைசாமி வழக்கமாக பாஜகவினர் திமுகவினரை சமூக வலைத்தளங்களில் ரயில் திருட்டு, ஓசி பிரியாணி, ஓசி டீ என திருடி தின்பதாக கிண்டல் செய்துள்ளனர், அது பல நேரங்களில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது, இந்நிலையில் துரைசாமியும் திமுகவினர் உழைப்பை திருடி விட்டதாக கூறி இருப்பது திமுகவினரை திருடர்களாக சித்தரிப்பதாக பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

துரைசாமியின் பேட்டியை நேரலையில் ஸ்டாலின் பார்த்து கொண்டிருந்த ஸ்டாலின் உடனடியாக அத்தியூர் செல்வராஜ் மற்றும் எ.ம வேலு ஆகியோருக்கு போன் போட்டு பார்த்தீர்களா எப்படி பேசுகிறார் நாம் திருடிவிட்டோமா என கோவமாக பேசியிருக்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கும் சூழலில் அடுத்து என்னவெல்லாம் நடக்க போகிறதோ?

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*