#BREAKING இன்று வி.பி.துரைசாமி நாளை பாஜகவில் இணையப்போகும் பெரும் புள்ளி அதிர்ச்சியில் ஸ்டாலின் !!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சூழலில் கொரோனா பெரும் தொற்று அனைத்தையும் கிடப்பில் போட்டு அனைவருக்கும் ஓய்வு கொடுத்தது.

Loading...

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, இந்த முறை பாஜக VS திமுக என நேரடியாக அடுத்த அடுத்த ஆட்டங்கள் அரங்கேற இருக்கின்றன, திமுகவை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் VP துரைசாமி இன்று பாஜக தலைவர் முருகனை நேரில் சந்தித்து பாஜகவில் இணைய இருக்கிறார்.

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த துரைசாமி திமுகவில் நீண்டகாலமாக இருந்தாலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் சீட் கேட்டும் ஸ்டாலின் கொடுக்க மறுத்ததாகவும், இதனையடுத்து இனியும் திமுகவில் இருந்து பயன் இல்லை அங்கு இருப்பதற்கு பாஜகவில் சென்று இணைந்துவிடலாம் என முடிவு எடுத்து இருப்பதாக துரைசாமி தரப்பில் கூறப்படுகிறது.

Loading...

அதே நேரத்தில் VP துரைசாமி போன்று பலர் திமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களில் பலர் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அவர்களை ஒன்றிணைக்கும் பணியை முன்னாள் திமுகவில் பெரும் புள்ளியாக வலம்வந்த மதுரையை சேர்ந்தவர் மேற்கொண்டு வருவதாகவும், தேர்தலுக்கு முன்னர் திமுகவில் அதிருப்தியில் உள்ள நபர்களை பாஜகவிற்கு அழைத்து வருவதற்கான பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வி பி துரைசாமி இணைந்தது போல் இன்னும் பலர் அடுத்து அடுத்து திமுகவில் இருக்குது வெளியேறி பாஜகவில் இணைவார்கள் என்றும் அதன் பிறகு அந்த முக்கிய புள்ளி தனது ஆதரவாளர்கள் உடன் நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது, இதுகுறித்து தற்போது தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடக்கத்தில் கட்சியில் இருந்து யார் சென்றாலும் கவலை இல்லை என்று இருந்தவர் தற்போது, அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகிகள் ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என உதவியாளர் வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார், இதில் இருந்தே அடுத்து தமிழகத்தில் அரசியல் களம் எப்படி இருக்க போகிறது என அறிந்து கொள்ளலாம்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*