Connect with us

#24 Exclusive

BREAKING வோடபோன் ஜியோ சேவை நிறுத்தம் !

குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன, இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, குறிப்பாக பங்களாதேஷ் நாட்டில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் கூட சட்டவிரோதமாக இந்திய சொத்துக்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகரான டெல்லியில் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுடன் இணைந்து சில கலவரக்காரர்களும் மிக பெரிய சதி திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, டெல்லியில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும், அரசின் மறு உத்தரவு வரும் வரை சேவை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கலவரக்காரர்களால் கலவரம் பரவாமல் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Loading...
Loading...

Trending