Connect with us

#24 Exclusive

BREAKING NIA வருகை தமிழக பத்திரிகையாளரை கொலை செய்ய திட்டமிட்டது அம்பலம் வீட்டை சுற்றி காவல் !

காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை போன்று தமிழகத்திலும் தீவிரவாத சம்பவங்களும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதும் அதிகரித்து விட்டதாக ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன, NIA கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 11 நபர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ந்து தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார், இது ஆரம்பத்தில் முன் பகையினால் நடந்த சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவர தொடங்கின, தொடக்கத்தில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறை பிறகு 8 தனிப்படை அமைத்ததுடன் விவகாரம் மிக பெரிய அளவில் இருப்பதை உணர்ந்த காவல்துறை NIA விற்கு தகவல் கொடுத்தது.

இதற்கிடையில் அக்கம் பக்கத்தில் உள்ள CCTV காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் காவலர் வில்சனை கொலை செய்ததாக சந்தேகப்படும் இருவர் மசூதிக்குள் கையில் துப்பாக்கியுடன் ஓடி ஒழிந்தது தெரியவந்தது, அதனை தொடர்ந்துதான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வரை விவகாரம் செல்லும் அளவிற்கு மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

கொலைசெய்யப்பட்ட சசி வில்சன் உடலினை உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட போது இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன, வில்சன் உடலில் பாய்ந்த குண்டுகள் டெல்லியில் பிடிபட்ட மூன்று தீவிரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்களுடன் ஒத்துபோகின, எனவே சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் தீவிரவாதிகள் என்பது உறுதியாகியது, அத்துடன் வில்சன் உடலில் 4 இடங்களில் வெட்டுக்கள் இருந்தன, இது இந்து முன்னணி பிரமுகர் மற்றும் ஆடிட்டர் ரமேஷ், ராமலிங்கம் ஆகியவர்களை கொலை செய்த கும்பல் பாணியில் இருந்ததை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

Loading...

அதனை அடுத்து NIA அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகள் இந்த சம்பவத்தை செய்தது உறுதியானது, இந்நிலையில் தற்போது மிக பெரிய அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வெளியாகியுள்ளன, டெல்லியில் பிடிபட்ட மூவர் மற்றும் வில்சன் கொலையில் தேடப்படும் குற்றவாளிகள் இருவர் சேர்ந்து இந்தியாவில் புதிதாக ஹல் ஹமீத் என்ற புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்றிணை உருவாக்கி அதன் மூலம் தாங்கள் எதிரி என கருதும் இந்து அமைப்பு தலைவர்கள், அரசியல்வாதிகள் குறிப்பாக ஊடகங்கள் மூலம் விழுப்புணர்வு ஏற்படுத்துபவர்களை கொலை செய்ய திட்டமிட்டதும்.,

மிக பெரிய பயங்கரவாத சம்பவம் ஒன்றிணை தென் தமிழகத்தில் செயல்படுத்தி அதன் மூலம் உலகில் செயல்படும் பயங்கரவாத குழுக்களிடம் பணத்தினை பெற்று மிக பெரிய அளவில் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்ற இருந்தது தெரியவந்துள்ளது, இந்த தகவலை கண்டறிந்த உளவு அமைப்பு தற்போது ஹல் ஹமீத் இயக்கம் சார்பில் தமிழகம் கர்நாடக கேரளா மாநிலங்களில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பினை அதிகரித்துள்ளது.

அதில் தமிழகத்தில் உள்ள பிரபல பத்திரிகையாளர் மற்றும் சமூகவலைதள பிரபலம் இருவர் இருப்பதை கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, தொடர்ந்து தமிழகத்தில் இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்படுவதும் அதனை ஊடகங்களும், தமிழக அரசியல்வாதிகளும் மூடி மறைப்பதும் அரங்கேறி வருகிறது கன்னியாகுமரி இந்தியாவின் எல்லை பகுதி என்பதும் இலங்கையில் சதி செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இங்குள்ள சில அரசியல் கட்சிகள் துணையுடனே மிக பெரிய பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றலாம் என்று கூறப்படுகிறது.

இனியாவது பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் குறித்து வெளியில் பேசுவார்களா? இல்லை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் உள்ளூர் தீவிரவாதிகளுக்கும் குடியுரிமை கேட்டு போராடுவார்களா?

©TNNEWS24

Loading...

Trending