விஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூ.500 கோடியா? அதிர்ச்சி தகவல்

விஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூ.500 கோடியா? அதிர்ச்சி தகவல்

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ’ஆக்சன்’ திரைப்படம் ரூபாய் 40 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில் அந்த படம் பாதி கூட வசூல் செய்யவில்லை என்றும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ 500 கோடி என்று அந்த படத்தின் இயக்குனரே தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஷால் நடித்து வந்த ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் அந்த படத்தை முடிக்க மேலும் 40 கோடி விஷாலிடம் கேட்டதாகவும் இதனை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டதாவும் செய்திகள் வெளியானது

இது பற்றி மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறுகையில் ’விஷாலிடம் நான் ரூ.40 கோடி கேட்டதாக வந்த தகவல் தவறு என்றும் அவரிடம் நான் 400 கோடி கேட்டேன் என்றும் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூபாய் 100 கோடி தேவைப்பட்டது என்றும் எனவே தான் படத்தை முடிக்க 400 கோடி கேட்டதாகவும் அதனால்தான் என்னை படத்திலிருந்து விலகி விட்டார்கள் என்றும் கிண்டலாக கூறியுள்ளார்

Loading...

மேலும் ஏற்கனவே இந்த படத்திற்காக 100 கோடி வாங்கி இருப்பதாகவும் நான் கேட்ட ரூ.400 கோடியையும் சேர்த்து இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி ரூபாய் என்றும் மிஸ்கின் கிண்டலாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *