நான் கேப்டன் ஆனதில் இவருக்கு மறைமுகப் பங்கு உண்டு – கோலி யாரை சொன்னார் தெரியுமா?

நான் கேப்டன் ஆனதில் இவருக்கு மறைமுகப் பங்கு உண்டு – கோலி யாரை சொன்னார் தெரியுமா?

Loading...

இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி தான் கேப்டனாக ஆனதற்கு தோனியின் பங்கு அதிகம் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு மூன்று வடிவிலானப் போட்டிகளுக்கும் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் 2017 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Loading...

இந்நிலையில் தற்போது ஒரு இன்ஸ்டாகிராம் உரையாடலில் தான் இந்திய அணிக்குக் கேப்டனானது குறித்து அவர் பேசியுள்ளார். அதில் ‘இந்திய அணியின் கேப்டனாக ஆவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. தோனி சொல்வதை எப்போதும் கேட்டுக்கொள்வேன். அவர் நிறைய விஷயங்களை என்னிடம் விவாதிப்பார். அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். நான் கேப்டனாக மாறியதில் அவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. 

அவர் நேரடியாக தேர்வாளர்களிடம் சென்று என்னைக் கேப்டனாக்குங்கள் என சொல்லவில்லை. அவர் சரியான அடையாளம் காட்டும் பொறுப்பை ஏற்றிருந்தார். அதற்காக 8 அல்லது 9 ஆண்டுகள் அவர் காத்திருந்தார்.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*