Connect with us

#24 Exclusive

தந்தையை முட்டி சரித்த மாடு சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து மீட்ட மகன் !

ஜல்லிக்கட்டு மாட்டிடம் இருந்து மகன் தந்தையை காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுகளை பெற்றுவருகிறது. திண்டுக்கல் அருகே, தன்னுயிரை துச்சமென மதித்து தனது தந்தையின் உயிரை மகன் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூரை அடுத்த அய்யர்மடத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் விவசாயம் செய்து கொண்டும்,10 வருடங்களாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து கொண்டும் வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென மணிவேலை ஜல்லிக்கட்டு மாடு ஒன்று சரமாரியாக கொம்பால் குத்திக் கொண்டிருந்தது.

இதில் படுகாயமடைந்து மணிவேல் கீழே விழுந்த நிலையிலும், அந்த மாடு அவரை தொடர்ந்து தாக்க முயற்சி செய்தது. இந்த தகவலறிந்து வந்த அவரது மகன் பூபதி, தந்தையின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்து, மாட்டை பிடித்தார்.

Loading...

பின்னர் கயிறு மூலம் மாட்டைக் கட்டிப்போட்டு விட்டு, தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் . தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரது தந்தை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தந்தையை காக்க மாட்டுடன் போராடிய மகனின் (பூபதி ) செயலை கிராம மக்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டினர்.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending