இன்னும் இரண்டு நாட்களில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் பதினான்கு நாட்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நிறைவடைகிறது.

Loading...

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய வைத்த விக்ரம் லேண்டர் கடந்த ஏழாம் ஆம் தேதி நிலவில் தரையிறங்கிய போது தகவல் தொடர்பை இழந்தது. இன் நிலையில், நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்ததுடன், தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. இதேபோல் அமெரிக்காவின் நாசாவும், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. இந்த முயற்சிகள் பயணனளிக்காததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர். இதனால் நிலவின் பகல் பொழுது நாளையுடன் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே இஸ்ரோ நிர்ணயித்தபடி, லேண்டரின் ஆயுள்காலமும் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இரவுப் பொழுதில் கடுமையான குளிர்ச்சி ஏற்படும் என்பதால் லேண்டரின் பாகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்படும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இஸ்ரோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*