Connect with us

#24 Exclusive

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் யாருக்கு வெற்றி? முடிவுகள் இதோ !

Published

on

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதேபோல் புதுச்சேரி  காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது.வாக்குப்பதிவு  காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.

இரு தொகுதிகளிலுமே  விக்கிரவாண்டியில் ஆசரக்குப்பத்தை தவிர எந்தவித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும் நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.,

இந்நிலையில் இரண்டு தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று தொகுதி மக்களை தாண்டி, தமிழகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .,  உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் அரசியல் கட்சிகளும் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

நாங்குநேரி :-

நாங்குநேரி தொகுதியை பொறுத்த மட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளருக்கு சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக கிடைத்துள்ளன.  அதே நேரத்தில் நாடார் சமூகத்தின் வாக்குகள் பெருமளவில் அதிமுக, காங்கிரஸ் என பிரிந்தே கிடைத்துள்ளது, ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் என்பதால் நாங்குநேரியில் சிறப்பான கவனிப்பு கவனிக்கப்பட்டுள்ளது, அதே நேரம் காங்கிரஸ் கவுரவ பிரச்னையாக கருதுவதால் கட்டுமான பணம் முழுவதும் தொகுதியில் பாய்ந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் தேவேந்திரகுல சமூகத்தினர் இந்த தேர்தலை புறக்கணித்தது மட்டுமல்லாமல் 54 கிராமங்களில் வாக்குகள் வெறும் 12% குறைவாக பதிவாகியுள்ளன, இவை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

தொகுதியில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் பெரும்பாண்மை இந்து சமுதாய வாக்குகள் அதிமுக வேட்பாளருக்கு அதிகமாக கிடைத்துள்ளதும், தேவேந்திரர் குல வேளாளர் சமூகத்தினர் தேர்தலை புறக்கணித்ததும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.  நாங்குநேரியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் 3% வாக்குகளில் வெற்றி பெறுவார்.

விக்கிரவாண்டி :-

விக்கிரவாண்டியை பொறுத்தளவில் தற்போது கடும் இழுபறி நிலவுகிறது, சென்ற முறை திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் பெரும்பாலும் நகை கடன் தள்ளுபடி, பேங்க் லோன், விவசாய கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து இருக்கிறார்கள், இந்த முறை திமுக எந்த வாக்குறுதியும் கொடுக்காமல், வன்னியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்தது, இது பெரும்பான்மை வன்னியர் சமூகத்தினர் நம்பவில்லை என்றாலும், பாரம்பரியமாக திமுகவிற்கு வாக்களிக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் எதிரொலித்திருக்கிறது.

அமைச்சர் சி வி சண்முகம் மற்றும் திமுக பொன்முடி இருவரும் வைட்டமின் ‘ ப ‘வினை வாரி இறைத்துள்ளனர், இறுதியில் விக்கிரவாண்டி தொகுதியில் இந்த முறை பணமும், சமுதாய ஓட்டும் வெற்றியை முடிவு செய்துள்ளது, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் ஜெகத்ரட்சகன், அரசியல் கேள்விக்கு உள்ளாகும் என்பதால் அவரும் களத்தில் வைட்டமின் ப வினை இறைத்துள்ளார்.

அதிமுகவிற்கு கூட்டணி ஓட்டுகள் கிடைத்துள்ளன, அதே நேரத்தில் சிறுபான்மையினர் ஓட்டு திமுகவிற்கு கிடைத்துள்ளது,  பட்டியல் இனத்தவர்கள் வாக்கு இந்த முறை வெற்றியை தீர்மானிக்கும் என்றும் சென்றமுறை போல அது முழுமையாக திமுக கூட்டணிக்கு செல்லவில்லை !

இறுதியில் பாமக வாக்குகள் முழுமையாக அதிமுகவிற்கு கிடைத்துள்ளது, அதிமுக வேட்பாளர் சிறிது முந்தினாலும் விக்கிரவாண்டி தொகுதியில் இழுபறியே நிலவுகிறது !

:-காரிகாலசோழன்

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share