குரல் கொடுங்கள் தொடர்புகொண்ட ஊடக பிரபலம் தெறித்து ஓடிய விஜய் சேதுபதி !! காரணம் என்ன?

தமிழகத்தில் சிறு விஷயங்கள் நடந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து அதன் மூலம் பிரபலம் அடையும் நடிகர்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளனர், அதில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி என்றே கூறலாம்.

Loading...

மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் குரல் எழுப்புபவர் விஜய் சேதுபதி, அவருக்கு ஆதரவாக திமுக, திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் குரல் கொடுப்பார்கள், மேலும் பத்திரிகையாளர் சிலரும் அதனை தங்கள் ஊடகத்தில் முதன்மை செய்தியாக வெளியிட்டு அவருக்கு விளம்பரம் தேடி கொடுப்பார்கள்.

வழக்கம்போல் கருத்து சொன்ன விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கினார், மேலும் பல்வேறு தரப்பினரும் அவரை கடுமையாக சாடினர், தெலுங்கு சமூகத்தில் பிறந்த ஒருவரை தமிழக சினிமா துறை வளர்த்துவிட்டது ஆனால் இப்போது எங்கள் நம்பிக்கைக்கு எதிராகவே விஜய் சேதுபதி பேசுகிறார் இனி விஜய் சேதுபதி தரம்தாழ்ந்து பேசினால்..,

Loading...

அவரது திரைப்படம் மதுரையில் ஓடாது என முருகுமாரன் எச்சரிக்கை விடுத்தார், மேலும் அரசியல் ரீதியாகவும் கடும் எதிர்ப்பை சந்தித்தார், இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தை பெரிது படுத்த சிலர் அணுகியதாக கூறப்படும் நிலையில் அதை தவிர்த்து இருக்கிறார்.

இந்நிலையில்தான் தமிழகத்தில் ஊடகதுறையில் பணியாற்றும் பெரும்பான்மை நபர்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக மாரிதாஸ் குற்றம் சுமத்தினார், மேலும் மதன் தனக்கு ஊடகத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்தார், இது மிக பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தது, இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல நெறியாளர் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு.

எங்களுக்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்கவேண்டும், இதனால் எங்களுக்கு ஆதரவு அனைத்து மட்டத்திலும் இருப்பதாக தோன்றும் என்று கேட்டிருக்கிறார், ஆனால் விஜய் சேதுபதி, தற்போதைய நிலையில் நான் எதிலும் ஈடுபாடு கொடுக்க விரும்பவில்லை என மழுப்பலாக பதில் கூறியிருக்கிறார்.

இதனால் வாயடைத்து போய் நெறியாளர் அமைதியாக இருந்துவிட்டாராம், விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுக்காததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது, விஜய் சேதுபதியை தொடர்புகொண்ட நபர், இதற்கு முன்னர் தவறான விவாதம் நடத்தி இளம்பெண் இருவர் தற்கொலை செய்துகொள்ள தூண்டப்பட்டவர் என்பதும் இதனால் அந்த பெண்ணின் s சமூகமான வன்னியர் சமுதாயம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது குறித்து அறிந்திருக்கலாம்.

மேலும் விஜய் சேதுபதி நடித்த அரசியல் திரைப்படமான துக்லக் தர்பார் விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இப்போது வாய் திறந்தால் படத்தின் வருமானத்தை பாதிக்கும் என கூறி அமைதியாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*