புறக்கணிக்க தொடங்கிய இந்துக்கள் விஜய் சேதுபதி இன்று என்ன செய்திருக்கிறார் பார்த்தீர்களா? பால்குடம் எடுப்பது மட்டுமே மிச்சம் !!

நடிகர் விஜய் சேதுபதி குறிப்பிட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்றே கூறலாம், எந்த அளவிற்கு விரைவாக ஏறுமுகத்தில் இருந்தாரோ அதே அளவு சங்கத்தமிழன் திரைப்படம் தோல்வியை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கிறார்.

Loading...

அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, விஜய் சேதுபதியின் அரசியல் கருத்து மற்றும் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக மட்டும் கருத்துக்களை பதிவு செய்வது, விஜய் சேதுபதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நம்மை காப்பாற்ற மேலே இருந்து யாரும் வரப்போவதில்லை என்று நாத்திக கருத்தை ஆடியோ விழா ஒன்றில் பேசினார்..,

இதற்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது வெளிநாட்டில் இருந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தார் அத்துடன் நில்லாமல் பெரியார் இன்றைக்கும் தேவைப்படுவதாக தன்னை பெரியார் சீடன் என்றும் குறிப்பிட்டார், ஒரு கட்டத்தில் நாத்திகம் பேசினார்.

Loading...

இதனை ஒரு கட்டத்திற்கு மேல் இந்து அமைப்புகள் எதிர்க்க தொடங்கினர், அதன் பிறகு விஜய் சேதுபதி எடுத்த ரகசிய சர்வேயில், நீங்கள் கிறிஸ்துவர் என்று பலர் நினைப்பதும், மேலும் நாத்திகவாதியாக உங்களை முன்னிறுத்துவதும் உங்கள் சினிமா வாழ்க்கையை மாற்றிவிடலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் நடைபெற்ற இண்டெர்விவ் ஒன்றில் இந்து கடவுள் முருகன் புகைப்படத்தை வைத்து தன்னை முருக பக்தராக காட்ட முயன்றார், மேலும் இன்று விஜய் சேதுபதியை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 மில்லியன் எண்ணிக்கையை தொட்டது.

அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெளியிட்ட புகைப்படத்தை ஓம் எனும் முருகனின் மந்திர. எழுத்தை பிடித்தபடி நன்றி சொல்லி இருக்கிறார், இதுநாள் வரை நாத்திக கருத்து பேசிய விஜய் சேதுபதி குறிப்பால் தன்னை இந்து என உணர்த்த வருவதாக பலரும் சந்தேகின்றனர்.

பெரியார் சீடனாக காட்டிக்கொண்ட சமுத்திரக்கனி, நவீன் போன்றோர் படங்கள் புறக்கணிக்கப்பட்டு தோல்வியை தழுவிய நிலையில் தனக்கும் அடுத்து வெளியாக இருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி இந்த வேலையில் விஜய் சேதுபதி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிகையாளர் ஒருவரின் அறிவுரையின் பேரில் இப்படி விஜய் சேதுபதி நடந்து கொள்கிறாராம், பொருளாதார ரீதியாக இந்துக்கள் தங்கள் நம்பிக்கையை இழிவு படுத்துபவர்களை புறக்கணித்தால் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் பழனிக்கே பால் குடம் எடுப்பார்கள் என கூறிய நிலையில் தற்போது அது உண்மையாகிவிட்டதோ?

இனி தமிழகத்தில் பெரியாரிஸ்ட்கள் நிலைமை?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3901 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*