Connect with us

#24 Exclusive

குற்றவாளியிடம் நகையை பரிசாக பெற்ற விஜய்யின் தந்தை சிக்குகிறார் ! முடிந்தது விஜய்யின் அரசியல் !

Published

on

குற்றவாளியிடம் நகையை பரிசாக பெற்ற விஜய்யின் தந்தை சிக்குகிறார் ! முடிந்தது விஜய்யின் அரசியல் !

சமூகவலைத்தளம்.,

பிகில் திரைப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியபோது எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க கூடாது என்றும் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ போன்றோர் இழப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்க படவேண்டும் என்றும் ஒரு உயிரை கொலை செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்ற நோக்கில் பரபரப்பாக பேசினார்.

இது பலரின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய்யின் தந்தை குற்றவாளியிடம் நகையை பரிசாக பெற்ற செயல் அதுவும் கொலை குற்றவாளியிடம் நகையை பரிசாக பெற்ற செயல், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருப்பவர் பில்லா ஜெகன் இவர் தன் தம்பியை கொலை செய்தது மட்டுமல்லாமல் மற்றொரு கொலை வழக்கிலும் தற்போது ஜாமீனில் உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவராக உள்ள பில்லா பாண்டி திமுகவில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வந்தார், ஆனால் கொலை வழக்கில் சிறை சென்றபோது எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக திமுக அவரை கட்சியில் இருந்து நீக்கியது. ஆனால் விஜய்யோ அவரது தந்தையோ குற்றவாளியான ஜெகனை மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்காமல் அமைதி காத்து வந்தனர்.

இந்நிலையில் தான் விஜய்யின் தந்தை பில்லா ஜெகனிடம் பிகில் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று ஜெகன் கொடுக்க தங்க நாணயத்தை பரிசாக விஜய்யின் தந்தை பெற்றிருக்கிறார், பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் இழப்பை பெரிது படுத்து பேசி தன்னை நல்லவர்போல், தமிழக மக்கள் இடத்தில் பேசிய விஜய், ஒரு கொலை குற்றவாளியை அதுவும் சொந்த தம்பியை கொலை செய்த வழக்கில் சிறை சென்றவரை மக்கள் இயக்கத்தில் வைத்திருப்பதுடன், அவரிடம் இருந்தே நகையை பரிசாக பெற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

விஜய் திரைப்படத்தில், தொலைக்காட்சியில் பேசுவது ஒன்று செயலில் செய்வது ஒன்று என இருப்பதாகவும் இதற்கு இந்த ஒரு பில்லாஜெகன் சம்பவமே எடுத்துக்காட்டு என்றும், இதுபோல் எத்தனை கொலை காரர்களை விஜய் தன்னுடன் வைத்து கொண்டு வெளியில் வீர வசனம் பேசப்போகிறார் என்றும் சமூகவலைத்தளத்தில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. மேலும் விஜய்யின் தந்தையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது விஜய்க்கு நெருக்கடி முற்றியுள்ளது, இனி விஜய் அரசியல் வசனங்கள் பேசினால் இதை முன்னுதாரணமாக காட்டியே விஜய்யின் அரசியல் பேச்சிற்கு பதிலடி கொடுப்பார்களே !

கொலை குற்றவாளியுடன் ஜோடி சேர்ந்த விஜய் !

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share