விஜயலட்சுமி தற்கொலை? சீமான் காளியம்மாள் கைது செய்ய படுவார்களா?

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் மற்றும் அவரது கட்சியில் அண்மையில் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்த காளியம்மாள் என்ற பெண்ணையும் கைது செய்யவேண்டும் என சமூகவலைத்தளங்களில் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது.

Loading...

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீமான் நடிகை விஜயலட்சுமியுடன் இருக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு, மற்றவர்கள் குறித்து விமர்சனங்கள் அறிவுரைகள் வழங்கும் சீமான் குறித்து இப்போது தெரிந்து கொள்ளுங்கள் என பொது வெளியில் குற்றம் சுமத்தியிருந்தார், அத்துடன் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றது குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைத்தார் விஜயலட்சுமி.

இது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சில தொண்டர்கள் இடையே சீமான் குறித்து அதிருப்தியை ஏற்படுத்தியது, பலர் சீமானை நோக்கி கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த சீமானின் வலது மற்றும் இடது கரங்களை கொண்டு கடுமையாக விஜயலட்சுமியை தரக்குறைவாக விமர்சனம் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.

Loading...

இதனை அடுத்து சீமானை விமர்சனம் செய்த விஜய லட்சுமியை, காளியம்மாள் என்பவர் மிக தரக்குறைவாக விமர்சனம் செய்தார், இன்னும் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் அவரது கற்பு உள்ளிட்டவை குறித்து தாக்கி பேசினர், இதனால் மனமுடைந்த விஜய லட்சுமி நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார், அதற்கு முன்னர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டு தாக்குதல்கள் நடைபெறுவதாகவும்.

தான் இறந்தால் நிச்சயம் சீமான்தான் பொறுப்பு எனவும், இதே போன்று என்னை தவறாக விமர்சனம் செய்தால், நிச்சயம் ஒருநாள் அனைத்து ஆதாரங்களையும், முக்கிய தகவலையும் வெளியிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிகவும் வேதனையுடன் தெரிவித்தவர் அது விரைவில் நடக்கும் எனவும் கூறியிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரண அடித்தட்டில் உள்ள காளியம்மாள் பேச்சு பலரையும் கவர்ந்த நிலையில் இதுபோன்று சக பெண்ணைதரக்குறைவாக பேசியது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சீமான் மற்றும் காளியம்மாள் இருவரையும் காவல்துறை கைது செய்யவேண்டும் எனவும் விஜயலஷ்மிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*