Connect with us

#24 Exclusive

ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று பெயர் எடுக்கலாம் என்று கமல்ஹாசன் உள்பட பலர் கூறினார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆரவ் மற்றும் ரித்விகா ஆகியோர்கள் கூட வாய்ப்புகள் இன்றி உள்ளனர். ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில் ரித்விகாவிற்கும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் பலன் அடைந்த ஒரே நடிகர் என்று ஹரிஷ் கல்யாணை கூறலாம். அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றதையடுத்து தற்போது அவர் கைவசம் 4 படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ’கசட தபற’. இந்த படத்தை விஜய் நடித்த ’புலி’ படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் சாந்தனு பாக்கியராஜ், சந்திப் கிஷான், பிரியா பவானி சங்கர், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், உள்பட பலர் நடித்து வருகின்றனர்

Loading...

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகையும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான விஜயலட்சுமி இணைந்துள்ளார். ஏற்கனவே ஹரிஷ் கல்யாணுடன் பிக்பாஸ் நடிகை ரைசா இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது விஜயலட்சுமியும் அவருடைய படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் ரெஜினா ஆகிய இருவர் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது முக்கிய கேரக்டரில் விஜயலட்சுமியும் இணைந்து உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜிப்ரான் ஆகிய 6 இசையமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர். அதே போல் ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர் இந்த படத்தில் பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரித்திருக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Loading...

Trending