எளிய முறையில் திருமணத்தை நடத்தி முடித்த கேப்டன் குவியும் பாராட்டு !!

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை தவிர்க்கும் விதமாக மக்கள் தாங்களே தங்களை தனிமை படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இன்று (22) மக்கள் ஊரடங்கு முறையும் அமல்படுத்தபட்டுள்ளது.

Loading...

இதனால் பொது மக்கள் தங்கள் வீட்டிலேயே தங்களை தனிமை படுத்தி கொண்டுள்ளனர், மேலும் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இன்று நடைபெறவிருந்த சூழலில் அவற்றை பலர் தள்ளி போட்டுள்ளனர், சிலர் தங்கள் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டு திருமணத்தை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரது கட்சி அலுவலகத்தில் பிரமாண்டமாக நடைபெற இருந்த கட்சியின் முக்கிய நிர்வாகி இல்லாதிருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுருக்கிறது.
இதற்காக விஜயகாந்த் வீட்டிற்கு மணமக்கள் விமல், கமலி ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் விஜயகாந்த் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று கூட்டம் கூடாமல் திருமணம் நடந்தது.மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று மாஸ்க், சானிடைசர் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து எளிய முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு விஜயகாந்த் தாலி எடுத்து கொடுத்தார். பின் மணமக்கள் அவரிடம் ஆசி பெற்று கொண்டனர்.

Loading...

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அரசு கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அதற்கு முன்மாதிரியாக செயல்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*