தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்!

தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்!

Loading...

தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000 ஐ நெருங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவிலான சோதனைகள் நடந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வந்தார். கடந்த வாரம் வரை தமிழகத்தில் தினசரி எண்ணிக்கை 700 க்கு மேல் இருந்த நிலையில் சில தினங்களாக மட்டும் எண்ணிக்கை 400 முதல் 500 வரை இருந்தது. இதனால் பாதிப்புக் குறைந்துள்ளதாக நம்பப்பட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா எண்ணிக்கயைக் குறைத்துக் காட்ட சோதனைகளை குறைத்துள்ளனர் எனக் குற்றம் சாட்டினார்.

Loading...

ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் ‘தமிழகத்தில் இதுவரை 3,37,841 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.39 அரசு ஆய்வகங்கள் உட்பட 61 ஆய்வகங்கள் தமிழகத்தில் உள்ளன. 24 மணி நேரமும், அரசின் ஒட்டு மொத்த இயந்திரமும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளன.

சோதனைக் குறைக்கப்பட்டதாக ஸ்டாலின் கூறுவது தவறானது. வெளியூர்களிலிருந்து வருபவர்களைப் பொறுத்து, அன்றைய நிலவரப்படி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை அதிகமாகும். ஒரு நாள் குறையும். கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்ட சோதனை எண்ணிக்கை சராசரியாக 12, 536 ஆக இருக்கிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் எனப் பலரும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 108 நாட்களாக உறக்கமின்றி பணியாற்றி வருகின்றனர். கொரோனா சோதனை என்பது ஒரு கூட்டு வேலை. இந்த மாதிரி நேரத்தில் ஆக்கப்பூர்வமான  கருத்துகளைச் சொல்லலாமே தவிர, விமர்சனம் என்ற பெயரில் பழிபோட வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*