Connect with us

சினிமா

சூர்யாவின் படத்தை தனியாக பார்த்த விஜய் – எதற்கு தெரியுமா?

தளபதி விஜய் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தினை தனியாக பார்த்துள்ளார்.

சூர்யா தற்போதைய சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தினை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சமீபத்தில் இதன் ஆடியோ ரிலீஸ் விழா விமானத்தில் புதுமையாக நடத்தப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த படத்தை தளபதி விஜய் தனியாக அமர்ந்து பார்த்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கு காரணம் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்பு விஜய் நடிக்கும் தளபதி 65 வது படத்தை இயக்க சுதா கொங்கரா முயன்றதாக தெரிகிறது. விஜய்க்கு அவர் சொல்லிய கதை பிடித்து இருந்தாலும் அவர் எவ்வாறு படமாக்குவார் என்பது தெரியாததால், அவர் சமீபத்தில் இயக்கிய சூரரைப்போற்று திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதையடுத்து அவருக்கு தனியாக அந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

Loading...

அந்த திரைப்படத்தை பார்த்து விஜய் திருப்தி அடைந்ததாகவும் அதனால் அவருக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாகவும் நேற்று இரவு முதல் கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

Loading...

விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது உறுதியாகி விட்ட நிலையில், அவர்களிடம் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending