படப்பிடிப்பு முடியும் முன்பே டப்பிங்கை தொடங்கிய விஜய் – ஜெட் வேகத்தில் மாஸ்டர் !

விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்திற்காக டப்பிங் வேலைகளை தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

விஜய்யின் 64 வது படமான மாஸ்டர் திரைப்படத்தை கைதி மாநகரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜயுடன் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படமும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு மாத காலமே ரிலீஸுக்கு இருப்பதால் படப்பிடிப்பிற்காக இணையாக மற்ற பணிகளையும் மாஸ்டர் படக்குழு செய்து வருகின்றது.

Loading...

இதன் ஒரு கட்டமாக நடிகர் விஜய் தற்போது தனது டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் 11 நாட்களே படப்பிடிப்பு உள்ள நிலையில் அதற்கு முன்பாக டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற பணிகளை முடித்த படக்குழு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் கோயம்புத்தூரில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*