சம்பளம் வாங்காமல் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பது ஏன்? மாற்றத்துக்குத் தயாராகும் தமிழ் சினிமா!

சம்பளம் வாங்காமல் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பது ஏன்? மாற்றத்துக்குத் தயாராகும் தமிழ் சினிமா!

Loading...

கொரோனாவுக்குப் பின்னர் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சத்யராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் சினிமா துறையை கடந்த 2 மாதங்களுக்கு மேல் முடக்கியுள்ளது. இதனால் சினிமாவில் தயாரிப்பாளர்கள் முதல் அடிமட்ட தொழிலாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சினிமா தயாரிப்பு முறைகளில் பெரிய மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது.

Loading...

நிச்சயமற்ற தன்மையில் நடிகர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அது மட்டும் இல்லாமல் மக்கள் உடனடியாக திரையரங்குகளுக்கு வருவார்களா என்றும் தெரியவில்லை. இதனால் குறைந்த முதலீட்டிலேயே படத்தைத் தயாரிக்க விரும்புகின்றனர். அல்லது நடிகர்களுக்கு லாபத்தில் பங்கு அளிக்கும் முடிவில் உள்ளனர். அதன் ஒரு கட்டமாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமன்யம் மற்றும் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தை முன்னணி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.  மையக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க,  கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் தவிர மற்ற கலைஞர்கள் யாருக்கும் சம்பளம் என்று முன்பணம் கிடையாது. முதலில் போட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்கு பின் வரும் பணத்தில் அவரவரின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு  ஒரு தொகை அளிக்கப்படும்.  மேலும் அந்த பட்ஜெட் தொகையும் 200 பங்குகளாக பிரிக்கப்பட்டு விற்கப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்த ரிஸ்க்கில் படம் தயாரிக்கப்படும் சூழல் உருவாகும் என சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*