மாஸ்டரால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர் – விஜய் செய்த உதவி!

மாஸ்டரால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர் – விஜய் செய்த உதவி!

Loading...

மாஸ்டர் படத்தை வாங்கி வெளியிட இருந்த லலித்குமாருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்காக அவருக்கு ஒரு படம் நடித்துத் தர விஜய் முடிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் . இப்போது கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Loading...

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இன்னும் இரு தினங்களில் வெளியாக இருந்த இந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தின் டிரைலராவது வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். தற்போது வரை படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், எப்போதும் முழுவதும் விலக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்படும் என்ற தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய லலித் குமாருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படலாம் என சொல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விஜய் லலித்தை அழைத்து படம் நடித்து கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் நிலையில் அதற்கு அடுத்த படத்தை லலித்குமார் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. 

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*