மாஸ்டரின் பெயர் இதுதான் – வெளியானது விஜய்யின் ஐடி கார்டு !

மாஸ்டரின் பெயர் இதுதான் – வெளியானது விஜய்யின் ஐடி கார்டு !

Loading...

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் அடங்கிய ஐடி கார்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் . இப்போது கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Loading...

இந்த படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நம்பத்தகுந்த இடங்களில் இருந்து வந்துள்ள தகவல்களின் படி டிரைலர் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது திறக்கபடும் எனத் தெரியாததால் மாஸ்டர் திரைப்படம் சொன்னபடி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினமும் இந்த படம் பற்றிய ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கும் வேளையில் இன்று படத்தில் விஜய் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜான் துரைராஜ்’ என்பதும், அவர் பணியாற்றும் கல்லூரியின் பெயர் ‘செயிண்ட் ஜெப்ரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பதும் வெளியாகியுள்ளது. இதுபோலவே படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*