தன்னை தாக்கியது யார் RJ விக்னேஷ் விளக்கம் !

சமூகவலைத்தளம் :- யூடுப் சேனல் ஒன்றின் மூலம் பிரபலமடைந்து தற்போது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருபவர் RJ விக்னேஷ் இவரை போண்டா விக்கி என்றும் அழைப்பர், இவர் தனது சானல்களில் அரசியல்வாதிகள் குறித்து கிண்டல் செய்வது வழக்கம், அதுபோல் திமுக தலைவர் முக ஸ்டாலினை ஒரு நிகழ்ச்சியின் மூலம் வாங்க செயல்தலைவரே என கிண்டல் செய்திருப்பார்.

Loading...

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் கடும் வைரலாக பரவி வருகிறது, மேலும் சமீபத்தில் YOUTUBE சேனல்களில் உள்ள வீடியோவினை திமுக பெரும் பணம் செலவு செய்து நீக்குவதாக தினமலர் செய்தி வெளியிட்டுருந்தது, அப்போது பலரும் RJ விக்னேஷ் திமுக தலைவர் ஸ்டாலினை TROLL செய்த வீடியோவினை பகிர்ந்து இந்த வீடியோவை திமுகவினர் பணம் கொடுத்து நீக்கினார்களா என கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில்தான் தற்போது RJ விக்கி சிலரால் மிரட்ட படுவது போன்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி அவரை திமுகவினர் தாக்குவதாக செய்திகள் வெளியானது அந்த வீடியோவில் அவர் மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டுவதாக செய்திகளும் வெளியானது, இந்த நிலையில்தான் RJ விக்னேஷ் விளக்கம் ஒன்றிணை கொடுத்துள்ளார், அதில்.,

Loading...

என்னை யாரும் மிரட்டவோ தாக்கவில்லை எனவும், எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களை பிராங்க் செய்வதற்காக பன் பன்றோம் குழுவும் , நாங்களும் செய்தது. நாங்கள் ஸ்மைல் சேட்டையில் இருந்த பொழுது செய்த வீடியோ அது . ஆனால் பல காரணங்களால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த வீடியோ எடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார், ஆனால் தற்போது சரியாக என் காட்சியை மட்டும் கட் செய்து பகிர்ந்துள்ளார்கள்.

இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ வீடியோ ஒன்றினை வெளியிடவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்,இதற்கு முன்னர் நடிகை ஸ்ரீரெட்டி உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய தகவலை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, பின்பு அதுபோல் எதுவுமே நடக்கவில்லை என்று பல்டி அடித்தது குறிப்பிடத்தக்கது, அதுபோல் இதிலும் ஏதாவது அழுத்தம் இருக்குமோ எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWs24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*