தோனிக்கு இனி வாய்ப்பில்லை- முன்னாள் வீரரின் கருத்தால் அதிருப்தியான ரசிகர்கள்!

தோனிக்கு இனி வாய்ப்பில்லை- முன்னாள் வீரரின் கருத்தால் அதிருப்தியான ரசிகர்கள்!

Loading...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இனிமேல் இந்திய அணியில் விளையாடுவது கடினம் என முன்னாள் பந்துவீச்சாளர் வெங்கடேச பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அதிகமும் பாதிக்கப்பட்டு இருப்பது தோனியின் ரசிகர்கள்தான். 7  மாதங்களாக சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் தோனி மீண்டும் மீண்டும் அணியில் இடம் பிடிக்க ஐபிஎல் போட்டிகளையே நம்பி இருந்தார். கபில்தேவ் மற்றும் ரவி சாஸ்த்ரி போன்றோரும் ஐபிஎல் தொடரில் சேவாக் விளையாடுவதைப் பொறுத்தே இந்திய அணியில் அவர் இடம் தெரியவரும் எனக் கூறியிருந்தனர். ஆனால் சேவாக் மற்றும் ஹர்ஷா போக்ளே போன்றோர் தோனியின் சர்வதேசக் கனவு முடிந்துவிட்டதாக அறிவித்துளனர்.

Loading...

இந்நிலையில் தோனியின் இந்திய அணி மீள் வருகை குறித்து முன்னாள் பந்துவீச்சாளர் வெங்கடேச பிரஸாத் ‘தோனி அணியில் இடம்பெற்று ஒரு வருடம் ஆகிறது அதனால் அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவது கடினம்.  ஆனால் அவருக்கு 40 வயதை நெருங்கிவிட்டதால் அவர் விளையாடுவதில் சிரமம் உள்ளது. ஒருவேளை தோனி உடற்தகுதியை நிரூபித்துவிட்டால் அணியில் இடம் பெற்று 3 வது அல்லது 4 வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை நிறைவு செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா ஊரடங்குகள் விலக்கப்பட்டு எப்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்பதே தெரியாத நிலையில் தோனி மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*