துரைமுருகன் வெளியேற்றம் தேர்தல் முடிவுகள் நிறுத்திவைப்பு வேலூர் தேர்தலில் அதிரடி திருப்பம் !

Loading...

வேலூர்.,

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒவ்வொன்றை சொல்லி கொண்டு இருக்கின்றன தற்போது 22 சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடபட்டன அதில் 9170 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார் என்று சொல்லப்பட்டு வந்த சூழலில்.,

Loading...

தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் முடிவுகளை ( மாவட்ட ஆட்சியர் ) நிறுத்தி வைத்துள்ளார், மேலும் 6 சட்டமன்றத்தொகுதிகளிலும் ‘ வி வி பேட் ‘ இயந்திரங்களில் பதிவான ஒப்புகைசீட்டுகளை எண்ணிய பிறகு தேர்தல் முடிவுகள் மாலை 4.30 மணிக்குத்தான் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் நிறுத்திவைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெற்றி சான்றிதழை பெறுவதற்காக குவிந்திருந்த துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் அனைவரையும் வெளியேற காவல்துறையினர் உத்தரவிட்டு வெளியேற்றி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகையில் எங்கே 2009-ல் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கண்ணப்பன் வெற்றி பெற்றார் என்று அறிவித்த நிலையில் இறுதியில் பா சிதம்பரம் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதுபோல் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுமோ என்று திமுகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எனினும் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியாகியிருப்பதால் ஏதும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*