Connect with us

#24 Exclusive

ரஜினியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இணைந்துள்ளார். இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் வேலராமமூர்த்தி இந்த படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் வேல ராமமூர்த்தியும் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இந்த படத்தில் வேல ராமமூர்த்தி இணைந்ததை அவருடைய பேரன் தன்னுடைய டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. டி. இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Loading...
Loading...

Trending