Connect with us

சினிமா

ரஜினி படத்தில் இணைந்த எழுத்தாளர்: டிவிட்டரில் வைரலாகும் புகைப்படம் !

ரஜினி படத்தில் இணைந்த எழுத்தாளர்: டிவிட்டரில் வைரலாகும் புகைப்படம் !

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் முதல் முறையாக ரஜினியுடன் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படாத நிலையில் தலைவர் 168 என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டது.

Loading...

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் தலைப்பும் மோஷன் போஸ்டர் வெளியானது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு அண்ணாத்த என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் ரஜினியின் புகைப்படம் எடுக்கும் மோஷன் போஸ்டர் வெளியானது. ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தில் ரஜினியோடு பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி இணைந்துள்ளார்.

Loading...

குற்றப்பரம்பரை, பட்டத்து யானை, குருதி ஆட்டம் ஆகிய நாவல்களை எழுதிய வேல ராமமூர்த்தி சேதுபதி, மதயானைக்கூட்டம் மற்றும் கிடாரி ஆகிய படங்களில் வில்லனாக நடித்துக் கலக்கினார். இப்போது வரிசையாக படங்களில் நடித்து வரும் அவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ரஜினியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர அது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending