Connect with us

#24 Exclusive

வீரமணி கைது விவகாரம் ! காவல்துறையினர் அதிரடி உத்தரவாதம் ! #ARRESTKVEERAMANI

Published

on

வீரமணி கைது விவகாரம் ! காவல்துறையினர் அதிரடி உத்தரவாதம் !

சென்னை.,

திராவிட கழக தலைவர் வீரமணி மீது பெரும்பாண்மை இந்து மக்களின் கடவுளான கிருஷ்ணரை பாலியல் குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு கடந்த ஏப்ரல் மாதம் பேசியதன் விளைவாக மத மோதலை தூண்டுதல், திட்டமிட்டு சதி செய்தல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுவும் குற்றம் நடந்து 4.5 மாதங்கள் கடந்து இந்து மத ஆர்வலர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகுதான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் ஆனால் அன்றே வீரமணி கைதாவார் என்று கூறப்பட்ட நிலையில் இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த சிலர் காவல்நிலையம் சென்று கேட்டபோது அங்கு காவல்துறையினர் அளித்த பதில் கடுமையான அதிர்ச்சியை அளித்துள்ளது, நாங்களும் சட்டத்தின் படி நடந்துவருகிறோம் தவறு செய்த வீரமணியை கைது செய்து சிறையில் அடைக்க எங்களுக்கும் விருப்பம் உள்ளது. எங்கு எவன் நம் மீது நடவடிக்கை எடுப்பான் என்ற தைரியத்தில்தான் வீரமணி போன்றோர்கள் தொடர்ந்து இந்து தெய்வங்களை கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அப்படி ஒருமுறை சிறையில் அடைத்தால் பலர் மாறிவிடுவர்.

தவறு அனைத்து தரப்பிலும் இருக்கிறது வீரமணி போன்ற அரசியல் ஆதரவுள்ள செல்வாக்கான நபரை கைதுசெய்ய வேண்டும் என்றால் முதலில் சமூகவலைத்தளங்கள், பொது இடங்கள் என அவருக்கு எதிராக கைது செய்யக்கோரி ஆதரவுகள் வலுப்பெற வேண்டும், பின்பு அதனை காரணம் காட்டி அரசியல் கட்சியினர் ஒதுங்கி கொள்வார்கள். ஆனால் எது எதற்கோ ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள் வீரமணியை கைது செய்யக்கூறி ஒரு இடத்தில் கூட நடந்துகொள்ளவில்லை.

நீங்கள் முதலில் வீரமணியை கைது செய்யக்கோரி இதை மக்கள் மத்தியில் எடுத்து செல்லுங்கள் முக்கிய விவகாரமாக மாற்றுங்கள் அப்போது வந்து எங்களிடம் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்க உங்களுக்கு அனைத்து தகுதியும் இருக்கிறது, அடுத்த நொடி சிறையில் இருப்பார் என்றும் உயர் அதிகாரி ஒருவர் உத்தரவாதம் தெரிவித்துள்ளார்.

தற்போது இதனை அறிந்த நெட்டிசன்கள் வீரமணியை கைது செய்யவேண்டும் என்றும் வீரமணியின் கைது இந்து மதத்தை விமர்சனம் செய்யும் பலருக்கும் பாடத்தை கொடுக்கும் என்றும் வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்கும் என்றும் கூறிவருகின்றனர், மேலும் தற்போது வீரமணியை கைது செய்யக்கோரி சமூகவலைத்தளங்களில் கொஞ்சம் #ARRESTKVEERAMANI என கொஞ்சமாக குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது விரைவில் வீரமணி கைது செய்யப்படுவாரா என்பது தற்போது நெட்டிசன்கள் கையில்தான் உள்ளது.

#ARRESTKVEERAMANI ட்ரெண்ட் ஆகுமா? தமிழக மக்கள் ஒன்று சேர்வார்களா? கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா குற்றவாளி வீரமணி? என பலரும் சமூகவலைத்தளம் மூலம் பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share