சவுக்கால் அடித்தது போன்று கேள்வி கேட்ட ராணுவ வீரர் ! இனியாவது தலித் என்று பொய் சொல்லாமல் இருப்பாரா ஷா நவாஸ்?

Loading...

சென்னை.,

நாடுமுழுவதும் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகளை திரும்ப பெற்றது தொடர்பான விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன அதில் பெரும்பாலும் பாஜகவை எதிர்க்க கூடிய கட மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, லல்லு பிரசாத் யாதவ், மாயாவதி உள்ளிட்டவர்களின் கட்சியினர் கூட காஷ்மீர் முடிவு சரியானது என்று அமைதியாக இருமத்துவிட்டனர்.

Loading...

ஆனால் தமிழகத்தை சேர்ந்த திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியினர் முழுவதுமாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதை வன்மையாக கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் கொடுத்தன. ஆனால் நேற்று தனியார் தொலைக்காட்சியை விவாத நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராணுவ வீரர் ஒருவர் எழுப்பிய கேள்வி இதுவரை பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

ஆம் பிரிவு 35 A யின் படி நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட தலித்துகள் காஷ்மீரில் மலம் அள்ளும் தொழிலை மட்டும்தான் செய்யமுடியுமாம், மலம் அள்ளும் தொழிலை தவிர்த்து வேறு வேலை செய்தால் அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படுமாம், மேலும் தலித்துகள் அங்கு அரசாங்க வேலையிலோ, அரசு பள்ளி, கல்லூரியில் சேர்ந்து பயில முடியாதாம்.

கடைசி வரை காஷ்மீர் மக்களுக்கு கொத்தடிமையாக மட்டும் மலம் அள்ளித்தான் வாழவேண்டும் இப்படித்தான் பிரிவு 35 A சொல்கிறது, இதில் கொடுமை என்னவென்றால் பாகிஸ்தானை சேர்ந்தவரை காஷ்மீர் பெண் திருமணம் செய்தால் அவருக்கு குடியுரிமை இருப்பதுடன் அவர் திருமணம் செய்துகொள்ளும் ஆணிற்கும் குடியுரிமை கிடைத்துவிடும்.

ஆனால் இந்தியாவில் காஷ்மீர் தவிர்த்து பெண் வேறு யாரையும் திருமணம் செய்தால் அவருக்கு குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதுசொல்லுங்கள் மனசாட்சி படி எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவனாவது இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வானா தலித் அமைப்பு என்று சொல்லி இனியும் நீங்கள் வாக்கிற்காக மக்களை ஏமாற்றாதீர்கள் என்று வெளுத்து வாங்கிவிட்டார் மனிதன்.

ஆனால் இதற்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போன ஷா நவாஸ் வழக்கம் போல் இது ஆர் எஸ் எஸ் சதி என்றும் இதனை ஏற்றால் நாளை தமிழகமும் பிரிக்கப்படும் என்று விவாதத்தை திசை திரும்பிவிட்டார்.

இந்நிலையில் ஷாநவாஸின் ட்விட்டர் பக்கத்தில் தன்னை தலித் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஷ்யாம் குமார் எனும் இளைஞர், உண்மையில் உங்களை போன்ற இயக்கங்கள் இனி தலித் ஆதரவாளர்கள் என்று சொல்லி எங்களை ஏமாற்றாதீர்கள் முஸ்லீம் ஆதரவு இயக்கம் என்று சொல்லி பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என்று பதிவிட தற்போது அந்த பதிவு வைரலாகியுள்ளது.

இனியாவது திருமாவளவன், ஷா நவாஸ் மற்றும் பலர் தலித் ஆதரவு இயக்கம் என்று சொல்வதற்கு பதில் தங்களை முஸ்லீம் ஆதரவு இயக்கம் என்று பெயர் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

காஷ்மீரில் கொத்தடிமையாக இருக்கும் தலித் மக்களை மீட்ட மத்திய அரசிற்கு மாயாவதி நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*