Connect with us

#24 Exclusive

கேள்வி என்றால் இப்படி இருக்கனும் ஷாநவாஸை கிழித்து தொங்கவிட்ட காயத்ரி ரகுராம் !

சமூகவலைத்தளம் :- நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் திருமாவளவன் கோவில் பற்றி பேசிய சர்ச்சையான கருத்திற்கு கடுமையாக பதிலடி கொடுத்தார், அதனை தொடர்ந்து விசிக கட்சியை சேர்ந்தவர்கள் அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், முகத்தில் ஆசிட் அடிப்போம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. ( காயத்ரி பதிவிட்டுள்ளார் ) அதனை தொடர்ந்து நேரடியாக மெரீனாவிற்கு வாருங்கள் என்று சவால் விடுத்தார் காயத்ரி.

இந்த தகவல் சமூகவலைத்தளம், ஊடகங்கள் என அனைத்திலும் பரவியது மேலும் ராஜபக்சே குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்றிணை பதிவு செய்து காயத்ரி கேள்வி எழுப்பினார், இதனால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதன் பின்னணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மற்றொரு முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் காயத்ரி ரகுராம். அதில் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய கருத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷாநவாஸை கடுமையாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Loading...

அதில் நீங்கள் வணங்கும் உங்கள் மதத்தை இதுபோல் கேவலப்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தலைவர் பெண்கள் குறித்து பேசியது சரியா? உங்கள் வீட்டு பெண்களை பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? நாங்கள் எந்த மதத்தையும் தவறாக பேசவில்லை எங்கள் மதத்தை பற்றி பேசியவருக்கு தண்டனை வேண்டும் என்று போராடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

மேலும் கோவிலை கட்டியது தமிழர்கள் உங்கள் தலைவர் தமிழர்களை குறை சொல்கிறாரா என வெளுத்து வாங்கி இருக்கிறார், அத்துடன் கோவில் சிலைகளை பார்த்தால் ஆபாசம் என்கிறார், இனி பிறந்த குழந்தைகளை ஆடை இல்லாமல் பார்த்தால் திருமாவளவனுக்கு ஆபாசமாக தெரியுமா? மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும்போது பார்ப்பது ஆபாசமா பதில் சொல்லுங்கள் என்று கிழித்து தொங்கவிட்டு வருகிறார், காயத்ரி.

தற்போது திருமாவளவனின் பேச்சு விஸ்வரூபம் எடுத்துள்ளது அதே நேரம் மூலம் பத்திரம் விவகாரத்தையும் யாரும் மறக்காததால் பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது விசிக. இந்நிலையில் காயத்ரி ரகுராமின் கேள்விகளுக்கு இதுவரை வாய் மூடி அமைதியாக இருக்கிறார் ஷாநவாஸ்.

Loading...

Trending