திருமாவளவனுக்கு பின் விடுதலை சிறுத்தைகளின் முகம் ஆகிறாரா ஷாநவாஸ்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறகு அந்த கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை இதுவரை அந்த கட்சி அடையாளப்படுத்தியது இல்லை.

Loading...

திருமாவளவனுக்கு அடுத்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், வன்னியரசு, ஆகியோர் பல காலமாக அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளனர் இந்த சூழலில்தான் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவனுக்கு பிறகு வழிநடத்தும் இடத்திற்கு ஷாநவாஸ் வரப்போகிறாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்க படுவது சமூக வலைத்தளமான ட்விட்டரில் திருமாவளவனுக்கு பிறகு ஷாநவாஸுக்கு மட்டுமே அதிகார பூர்வ பக்கத்திற்கான வெரிபைட் அடையாளம் கிடைத்துள்ளது, அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ரவிக்குமார் என்பவருக்கு கூட அந்த அடையாளம் கிடைக்கவில்லை.

Loading...

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகார பூர்வ தொலைக்காட்சியான வெளிச்சம் தொலைக்காட்சியில் கூட திருமாவளவன் கருத்திற்கு பின்பு ஷாநவாஸ் பேச்சிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, எனவே இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் ஷாநவாஸ் விடுதலை சிறுத்தைகளின் அடுத்த முகமாக பார்க்க படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*