பொய் பேசுவதில் அருணனை மிஞ்சிய திருமாவளவன் காவல்நிலையத்தில் அதிரடி புகார் ! காவல்துறை பதிலால் VCK குமுறல் !!!

தமிழக அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் அதிக பொய்களை பரப்புவதில் முதலிடத்தில் இருப்பவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன், டெல்லியில் போலீஸாரை துப்பாக்கியில் சுட்ட நபர் Rss இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என தெரிவித்து பின்பு அவை அனைத்தும் பொய் என தகவல் வெளியானது. இது அவர் சொன்ன 120 பொய் என தனியார் யூடுப் சேனல் செய்தியே வெளியிட்டது.

Loading...

இந்நிலையில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான திருமாவளவன் அருணனை மிஞ்சும் அளவில் மிக பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார் அதை ஆதாரத்துடன் பிடித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு இறந்துபோன வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தால் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கிலும் உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கிலும் திருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் ஆகியோர் மக்களுக்கு தவறானத் தகவல்களைத் தருகிறார்கள்.

Loading...

உண்மையில் சாத்தான்குளத்தில் சேவாபாரதி என்ற அமைப்பே இல்லை. தமிழகத்தில் எந்த காவல் நிலையத்திலும் போலீஸாருடன் இணைந்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் சேவாபாரதி அமைப்பினர் பணி செய்யவே இல்லை. வீடியோவில் அதைப் பதிவிட்டவர்கள், எந்த ஊரைச் சேர்ந்த சேவாபாரதியினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகப் பணியாற்றுகிறார் என்று கூறவில்லை.

பொதுவான குற்றச்சாட்டை வேண்டுமென்றே தவறான உள்நோக்கத்தில் பரப்பி விடுகிறார்கள். கரோனா என்ற கொடிய நோய் தீவிரமாகப் பரவி வரும் இக்கட்டான காலகட்டத்தில் காவல்துறையினருடன் இணைந்து பொது இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், பொதுமக்களுக்கு உணவு வழங்குதல், மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளை சேவாபாரதி அமைப்பு தமிழகம் முழுவதும் செய்து வந்தது. மேலும் சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சேவா பாரதி அமைப்பினர் பல லட்சம் பேருக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைச் செய்துவந்தனர் என்பது வெளிப்படையான உண்மை.

கரோனா காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பல லட்சம் பொதுமக்களுக்கு மற்றும் மருவத்துவமனையில் உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளையும் சேவாபாரதி அமைப்பினர் செய்து வந்தனர். இதனால் சேவா பாரதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நற்பெயரும் மரியாதையும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் சேவாபாரதி அமைப்பிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொலைவழக்கில் வழக்கு விசாரணையைத் திசைதிருப்பும் விதமாகவும் பொய்யான தகவல்களை மக்களுக்கு அளித்து இரண்டு பிரிவினர்களிடையே கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து அதன் மூலம் லாபம் அடையத் துடிக்கும் வீடியோகளைப் பதிவு செய்த நபர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் அதனைத் தூண்டியவர்கள் மீதும் சட்டப்படியான முதல்நோக்கு வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.
எனவே, மூன்று யூடியூப் சேனல்களையும் தடைசெய்து வீடியோக்களை வலைதளத்தில் இருந்து நீக்கவும், பொய்யான தகவலைப் பரப்பிய, தூண்டிய, உடந்தையாக இருந்த அனைவர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்”.
இவ்வாறு ரபு மனோகர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அளித்த உடன் அதனை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் புகார் மனுவின் மீது விசாரணை செய்து பொய் தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததுடன் சமூக வலைத்தளங்களில் சாத்தான்குளம் சம்பவம் பற்றி தவறான கருத்துக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து மக்களவை உறுப்பினராக இருப்பவர் அதிக பொய்களை பரப்புவதில் திருமா முதல் இடத்தை பிடித்திருப்பார் என்று கூறி சமூக வலைத்தளங்களில் கடும் கிண்டல் உண்டாக்கியுள்ளது, இதற்கிடையில் FRIENDS OF POLICE அமைப்பு லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உண்டாக்கபட்டுள்ளது என்றும் அதன் நிர்வாகிகள் அனைவரும் கிறித்தவர்கள் என்ற தகவல் தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்றிணை பொய் செய்தியை பரப்பி தலைவர் தடை செய்வதற்கு காரணமாக அமைந்துவிட்டாரே இனி கிறிஸ்துவர்களை எதை சொல்லி சமாதான படுத்துவது என விசி க தொண்டர்கள் கவலையில் உள்ளார்களாம்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*