பிகில் படத்தின் சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்த வரலட்சுமி! யாருக்காக தெரியுமா?

Loading...

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மொத்த வசூல் இதுவரை 200 கோடிக்கும் அதிகமாக சென்று கொண்டிருப்பதாகவும் இன்னும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் 300 கோடியை நெருங்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் கொண்டாடி வருகின்றனர். பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி, தான் நடத்தி வரும் ’சேவ் சக்தி’ என்ற அமைப்பிற்காக ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் தனது ’சேவ் சக்தி’யில் உள்ள குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அவர்களுடன் சேர்ந்து வரலட்சுமியும் பிகில் படத்தை பார்த்து மகிழ்ந்தார். பிகில் படம் பார்த்த அனைத்து குழந்தைகளும் மிகுந்த சந்தோசம் அடைந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த வரலட்சுமி இது போன்ற சின்ன சின்ன சந்தோசங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதுதான் தனது உண்மையான மகிழ்ச்சி என்று தெரிவித்தார்

Loading...

பிகில் படம் பார்த்த அனைத்து குழந்தைகளும் தங்களுக்கு இந்த படம் பிடித்து இருப்பதாக கூறியதோடு பிகில் படம் பார்த்த பிறகு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதுவே இந்த படத்தின் உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*