Connect with us

#24 Exclusive

வண்டுமுருகன் பாணியில் சட்டசபையில் ஸ்டாலினை கலாய்த்த ஆளுநர் கடும் வைரல்

Published

on

சட்டசபை கூட்ட தொடரில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் பல்வேறு புகார்களை முன்வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த எம் எல் ஏ கள் வெளிநடப்பு செய்தனர், இந்நிலையில் சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் ஆளுநருக்கும் இடையே வடிவேல் திரைப்படம் ஒன்றில் வரும் காமெடி காட்சிகள் போன்றே அரங்கேறியுள்ளது.

எல்லாம் அவன் செயல் படத்தில் வண்டு முருகன் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்திருப்பார், அந்த படத்தில் மிகவும் பிரபலமான காமெடி காட்சி ஒன்று நீதிமன்றத்தில் நடக்கும் அதில் வடிவேலு i m speeking என்று கத்தி தனது வாதத்தை தொடங்கும் போது நீதிபதி Mr வண்டு இது கோர்ட் இப்படியெல்லாம் கத்த கூடாது என அறிவுரை வழங்குவார், தற்போது அதேபோன்ற காட்சிகள் அச்சு அசராமல் நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரில் நடந்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று வழக்கம்போல் தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கியது, பன்வாரிலால் புரோகித் தனது உரையை தொடங்க தயாரானார் அப்போது தமிழக திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேச ஆரம்பித்தார். ஆளுநர் உரைக்கு முன்பே இதுவரை யாரும் விவாதம் நடத்த அனுமதித்தது இல்லை இதனிடையே

Loading...

உடனே குறுக்கிட்ட ஆளுநர், “ஒரு நிமிடம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்,” என்று முகம் மலர சிரித்தபடி சொன்னார். உடனே, அதிமுக எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி பலத்த சிரிப்பு சத்தத்துடன் சத்தம் எழுப்பினார்கள். தொடர்ந்து ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியும், அதற்குத் தமிழக அரசு ஆதரவாக இருப்பது பற்றியும் விமர்சித்து உரையாற்றத் தொடங்கினார்.

Loading...

ஸ்டாலினின் மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர் தொடர்ந்து உரையாற்றியபடியே இருந்தார். இதனால் எரிச்சலடைந்த ஆளுநர் ப “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரே, நீங்கள் மிகச் சிறந்த பேச்சாளர் என்பது எனக்கு மட்டுமல்ல நாட்டுக்கேத் தெரியும். அந்த திறமையை நீங்கள் இங்கே காட்டக் கூடாது. இந்த அவை விவாதங்களுக்கானது. விவாதம் செய்ய இந்த இடம் பயன்படுத்தப்பட வேண்டும். உரையாற்ற அல்ல,” என்றார்.

ஸ்டாலின் அடிக்கடி தனது மேடை பேச்சில் வாய் “குளறுவதை ” மறைமுகமாக ஆளுநர் கிண்டல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது ‘இதனால் ‘ஸ்டாலினுக்கு இப்படி ஆளுநர் ‘நோஸ் கட்’ கொடுக்க, உஷ்ணமான திமுக எம்எல்ஏக்கள் “கூச்சலிட” ஆரம்பித்தனர்.  அதனை தொடர்ந்து ஆளுநர் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்கிறார் என்று எண்ணிய திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் ஆளும் கட்சி எழுதி கொடுத்த புராணத்தை வாசிக்கிறார் என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டது. தற்போது இந்த தகவல் காட்டு தீ போல பரவி வருகிறது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending