Connect with us

#24 Exclusive

கனடா நாட்டில் வானதி ஸ்ரீனிவாசன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?

பாஜக மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கடந்த 24 ம் தேதி கனடா நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார், சென்னை விமான நிலையத்தில் அவரை பாஜகவினர் வழியனுப்பி வைத்தனர், அதன் பிறகு டொராண்டோ சென்றடைந்தவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

டொராண்டோ சென்றடைந்தவர் அங்கு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட இந்திய மாணவியை சந்தித்து நலம் விசாரித்தார் அதன் பிறகு, டொரன்டோ,
நகரில் இந்திய கன்சுலேட் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த இந்தியர்கள் இடையே கலந்துரையாடினார், அதன் பிறகு கனடா வாழ் இந்தியர்கள் மூலம் நடத்தப்பட்ட CAA சட்டதிருத்தத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அவரும் கலந்து கொண்டு CAA விற்கு ஆதரவான பதாகைகள் ஏந்தி குரல் எழுப்பினார்.

இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் டொராண்டோ தமிழ் அமைப்பு ஒன்றின் சார்பில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார், மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள இந்தியர்கள் இடையே பேசிவருகிறார். இவை இதுநாள்வரை அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்.

Loading...

தற்போது வானதி ஸ்ரீனிவாசன் குடும்பத்தினருடன் சுற்று பயணம் மேற்கொண்ட நிலையில் அவர் அரசியல் ரீதியாக அல்லது வேறு ஏதேனும் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி கனடா நாட்டிற்கு சென்றுள்ளாரா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றனர், இவற்றிற்கு அவர் இந்தியா திரும்பியதும் விளக்கம் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

Loading...

தமிழக பாஜகவிற்கான மாநில தலைவர் போட்டியில் வானதி ஸ்ரீனிவாசனின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending