கொரோனா முடியும் வரை நோ அப்டேட்! வலிமை தயாரிப்பாளர் கண்டிப்பு!

கொரோனா முடியும் வரை நோ அப்டேட்! வலிமை தயாரிப்பாளர் கண்டிப்பு!

Loading...

அஜித் நடிக்கும் வலிமைப் படத்தின் அப்டேட் எதுவும் கொரோனா லாக்டவுன் முடியும் வரை வெளிவராது என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. முக்கியமான ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி படம் தீபாவளிக்கு வெளியாகாது எனத் தெரிகிறது.

Loading...

இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட்டுகளை தினமும் அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளரிடம் கேட்ட வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் ’உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை தான் தயாரிக்கும் எந்த படம் குறித்த அப்டேட்டும் வராது’ எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வலிமைப் படத்தின் பெரும்பகுதி ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளிநாட்டில் எடுக்க இருந்த காட்சிகளையும் உள்நாட்டிலேயே எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*