திட்டத்தில் வைரமுத்துவிற்கும் பங்கு வெளியானது அதிர்ச்சி தகவல் !!ஈமெயில் உரையாடல்கள் கசிந்தன !!

தமிழகத்தில் திமுகவிற்காக சிலர் பணியாற்றுவதாகவும் திமுகவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சித்தாந்த ரீதியாக இந்து மதம் மற்றும் திமுகவிற்கு எதிர் அரசியல் செய்பவர்களை திட்டமிட்டு சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பொய்களை பரப்புவதாக பலர் குற்றம் சுமத்தினர்.

Loading...

இந்நிலையில் மாரிதாஸ் தனது youtube சேனலில் தமிழகத்தில் எவ்வாறு ஊடகத்தில் பணிபுரிபவர்கள் திமுகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார்கள் என்ற தகவலை தொகுத்து வழங்கினார், இதனை கண்டித்து பத்திரிகை துறையில் பணியாற்றும் சிலரும், அரசியல் கட்சியினரும் மாரிதாஸிற்கு கண்டனம் தெரிவித்தனர், சில பத்திரிகையாளர்கள் சங்கம் ஒருபடி மேலே சென்று மாரிதாஸை கைது செய்யவேண்டும் எனவும் வலியுரித்தனர்.

இந்நிலையில் மாரிதாஸ் குற்றம் சுமத்திய நிறுவனம் தமிழக பத்திரிகையாளர்களை விலைக்கு வாங்கி தனக்கு ஆதரவாக செயல்பட்ட தகவலை தி இந்து ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

Loading...

இது குறித்து அந்த கட்டுரையில் வெளியான தகவல் : ஜெயலலிதா மரணமடைந்ததும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற அரசியல் தன்மையையும், குழப்பத்தையும் உருவாக்க தி.மு.க எடுத்த முன் முயற்சி திட்டம்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் என்றும்,

இப்போராட்டத்தை எப்படி தூண்டிவிடுவது, நடத்துவது, எந்தெந்த நபர்களை கொண்டு தொடர்ச்சியாக இதை ஒரு சாகும்வரை போராட்டமாக நடத்தி நிர்வாகத்தை நிலைகுலைய செய்து அ.தி.மு.க அரசை கவிழ்ப்பதுதான் தி.மு.க-வின் திட்டமென்றும்

இந்து ஆங்கில நாளிதழ் தங்களுக்கு கிடைத்த ஓ.எம்.ஜி என்ற நிறுவனம் மூலம் கசிந்த சில மின்னஞ்சல் தகவல்கலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் பெயர் “பிராண்டு தளபதி”-யாகும்.

ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் என்ற ஒரு போராட்டத்தை செயற்கையாக தூண்டி நடத்தியது பிராண்டு தளபதி என்கிற ஸ்ட்ரேட்டஜிக் திட்டம்தான்.
திருச்சி தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் ஆகியோர் இந்த சூப்பர் திட்டத்தின் இயக்குனர்கள்.

இந்த பிராண்டு தளபதி திட்டத்தை வடிவமைத்து, இந்த போராட்டத்தை நிர்வகித்தது One Mind Generation Research Foundation (OMG) என்கிற ஒரு மேலாண்மை ஆலோசனை நிறுவனமாகும் என்றும் இரகசியமாக வெளியான இ.மெயில் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக தி இந்து பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

2015-ஆம் ஆண்டே இத்திட்டம் தொடங்கியதாகவும் அப்போது முதன் முதலாக ஜல்லிக்கட்டுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப்பட்டதாகவும் ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது இந்த போராட்டம் பிசுபிசுத்ததால் ஜெயலலிதா மரணத்துக்கு பின் விரிவான அளவிலும், தீவிரமாகவும் இந்த திட்டம் முன்னெடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்துக்கான செலவுகள் அனைத்தும் தி.மு.க-வினர் ஏற்றுக் கொண்டதாகவும், அதன்படி OMG நிறுவனம் தி.மு.க-வின் பெயர் வெளியே தெரியாதவாறு மக்கள் கலை இலக்கிய கழக போராளி கோவன், சின்னப்பொண்ணு, கவிஞர் வைரமுத்து போன்றோரை இந்த போராட்டத்தில் பங்கேற்க செய்து, தமிழக இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு இப்போராட்டத்தி நடத்தியதாகவும் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க-வுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து அளித்தது இந்த OMG நிறுவனம்தான் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக அரசியலில் மேற்கண்டவாறு குழப்பம் விளைவிக்கவும் இந்த நிறுவனம்தான் பயன்படுத்தப்பட்டதாக மேற்படி இ.மெயில் தகவல்கள் தெரிவிப்பதாக இந்து ஆங்கில செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் படிக்க –> (https://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-tried-its-best-to-ride-on-jallikattu-wave/article26832300.ece)

இந்நிலையில் தமிழக ஊடகத்தில் பணத்திற்கு விலைபோன குள்ள நரிகளை வெளியேற்றவேண்டும் என்றும் ஊடகத்தில் பணியாற்றும் செந்தில், குணசேகரன் ஆகியோரை நீக்கவேண்டும் என்று இதுவரை தமிழகத்தில் இருந்து NEWS18 நிர்வாகத்திற்கு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் சென்றுள்ளதாகவும் அவர்கள் விளக்கம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கவிஞர் வைரமுத்து திமுகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேறு என்னென்ன வேலையில் ஈடுபட்டார் என்று மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3900 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*