Connect with us

சினிமா

போர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – வடிவேலுவைப் பற்றி நடிகரிடம் சொன்ன விஜயகாந்த் !

போர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – வடிவேலுவைப் பற்றி நடிகரிடம் சொன்ன விஜயகாந்த் !

தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்துக்கும் வைகைப்புயல் வடிவேலுவுக்கும் எழுந்த பிரச்சனை பற்றி நடிகர் சுப்பாராவ் சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே 2011 ஆம் ஆண்டுகாலத்தில் எழுந்த பிரச்சனை அனைவரும் அறிந்ததே. அதனால் வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது விஜயகாந்தை குடிகாரர் என்று கிண்டல் செய்தது பரபரப்பைக் கிளப்பியது. அதன் பின் தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக ஆனபின்னர் வடிவேலு சினிமாக்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதற்கு விஜயகாந்த் கட்சியினர் மிரட்டியதுதான்  காரணம் என சொல்லப்பட்டது.

Loading...

இந்நிலயில் நடிகர் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் நெருக்கமான நகைச்சுவை நடிகர் சுப்பாராவ் இதுபற்றி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் ‘எனக்கு வடிவேலுவை அவன், இவன் என்று சொல்லுமளவுக்குப் பழக்கம். அவர் முதலில் அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்தில் நான் துணை இயக்குனர். அதே போல விஜயகாந்துக்கும் நான் மிகவும் நெருக்கம்.

Loading...

2011 தேர்தல் சமயத்தில் விஜயகாந்த் அண்ணனை திட்டியது தொடர்பாக நான் வடிவேலு கிட்ட கோபப்பட்டேன். ஆனால் அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவரா இருந்த விஜயகாந்தை நான் சந்தித்த போது ’வடிவேலுவை நடிக்க சொல்லுடா… அவர் இல்லாமல் போர் அடிக்குது’ எனக் கூறினார். இதை நான் வடிவேலுவிடம் சொன்னபோது ‘கேப்டன் அப்படியா சொன்னாரு’ என ஆச்சர்யமாகக் கேட்டார். அவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ரசிகர்கள்தான் அடித்துக் கொண்டார்கள்’ எனக் கூறியுள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending