Connect with us

#24 Exclusive

வளர்ந்து வரும் எதிர்கால சவாலை சமாளிக்க விண்வெளி படையை உருவாக்கி வரும் அமெரிக்கா !!

Published

on

பாதுகாப்புத் கட்டமைப்பிற்குள் ஒரு முழுமையான அமெரிக்க விண்வெளிப் படையை உருவாக்கி, 21 ஆம் நூற்றாண்டின் பெருகிவரும் மூலோபாய சவாலை அமெரிக்கா சந்திக்க தன்னை தயார்படுத்தி வருகிறது. ஆகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கனவு திட்டமான விண்வெளி படையின் உருவாக்க பணிகளை மிக வேகமாக முடிப்பதில் உறுதியாக உள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் லட்சிய திட்டமான விண்வெளி படையை உருவாக்குதல் முதலில் கடும் எதிர்ப்பை சந்தித்தது.

ஆனால் 2020 தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் விண்வெளிப் படையின் உருவாக்கத்தை டிரம்ப் உறுதி செய்தார், மேலும் பென்டகன் ராணுவத்தின் மற்ற பிரிவுகளுக்கு செலவிடப்படும் அதே அளவு தொகையை பட்ஜெட்டில் விண்வெளி படைக்கென ஒதுக்கீடு செய்துள்ளதுபடைக்கான ஆரம்ப வரவு செலவுத் திட்டத்தை இராணுவத்தின் மற்ற ஐந்து கிளைகளுடன் சமமாக நிற்கும்.

“விண்வெளியில் நிறைய விஷயங்கள் நடக்கப் போகின்றன, ஏனென்றால் விண்வெளி உலகின் புதிய போர்க்கள களமாகும்” என்று இராணுவ வீரர்களிடம் சமீபத்தில் அதிபர் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது. “விண்வெளி அடிப்படையிலான திறன்களை நம்பியிருப்பது வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது, இன்று விண்வெளி தனித்துவமான யுத்த சண்டை களமாக உருவாகியுள்ளது” என்று பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார் மேலும் அவர் கூறும்போது “அந்த களத்தில் அமெரிக்க ஆதிக்கத்தை பராமரிப்பது இப்போது அமெரிக்க விண்வெளிப் படையின் நோக்கமாகும்” என்றார் எஸ்பர். 1947 ஆம் ஆண்டில் ஒரு தனி அமெரிக்க விமானப்படையின் தேவையை உணர்ந்தும் வான்வழிப் போர் என்பது எதிர்காலத்தில் முக்கியமான ஒரு தனி களமாகும் என்பதை அங்கீகரித்தும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தரைப்படையிலிருந்து அமெரிக்க விமானப்படை தனியாக பிரிந்தது.இப்போது அந்த அங்கீகாரம் விண்வெளிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Loading...

எதிர்காலத்தில் நாசகார செயற்கைகோள்கள் மற்றும் செயற்கைகோள் அழிவு ஆயுதங்கள் நிரம்பிய விண்வெளியில் தனது நாட்டின் ஆதிக்கம் இம்மியளவும் குறைந்து விடக்கூடாது என்பதில் வெள்ளை மாளிகை மிகவும் உறுதியாக உள்ளது. ரஷ்யா, சீனா, இந்தியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் விண்வெளியில் தங்கள் சக்தியையும் ஆதிக்கத்தையும் பெருக்க பெரும் முயற்சி செய்து வருகின்றன. இதில் ரஷ்யா, சீனா , இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு பின் செயற்கைகோள்களை அழிக்கும் திறனை பெற்றுள்ளன ஆகவே அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மேலும் பெருக்கி தனது வல்லரசு திறன்களை பெருக்க நினைக்கிறது.

Loading...

உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகள் தான் செயற்கைகோள்களை அழிக்கும் திறன் கொண்ட நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending