இந்தியா போலவே அமெரிக்காவும் சீன செயலிகளை தடை செய்யுமா??

இந்தியா போலவே அமெரிக்காவும் சீன செயலிகளை தடை செய்யுமா??

Loading...

இந்தியாவின் மத்திய அரசு 2 நாட்களுக்கு முன்னர் டிக்டாக், ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகள், இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் சமீபத்தில் தடை விதித்தது. திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு காரணம், இந்தியா- சீனா எல்லை பிரச்சனைகள் ஆகும். கடந்த 15 தேதி நடந்த இந்தியா- சீனா எல்லை பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் இரு இராணுவ நாடுகளுக்கு

இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியா இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து உள்ளன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இராணுவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இத்தாக்குதலால் இருநாடுகளுக்கும் போர் பதற்றம் நீடித்து வருகின்றன. இந்நிலையில் சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் சீனா தயாரிப்புகளை புறக்கணித்த பின்பு

Loading...

தற்போது மத்திய அரசு சீனாவின் செயலியான டிக்டாக், ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன ஆஃப்களை தடை விதித்தது. அதனை தொடர்ந்து சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, லெனோவா, ஜியோமி உள்ளிட்டவற்றுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாகவும், மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் கூட்டு நிறுவனங்கள் மூலமும் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் மத்திய உணவு

மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் டிக் டாக் மூலம் பயனாளிகளின் முழு தரவுகளை சீனாவுக்கு அனுப்புவதாகவும், மற்றும் மொபைலில் உள்ள போட்டோ, குறுஞ்செய்திகள் போன்றவற்றை டிக் டாக் கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் சீனாவின் ஆக்கிரோஷத்தால், 59 சீனா செயலிகள் இறையாண்மைக்கும்,

பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் தடை செய்ததை தொடர்ந்து,தற்போது அமெரிக்காவிலும் 59 சீனா செயலிகளை தடை விதிக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 4 கோடி பேர் டிக்டாக் உபயோகப்படுத்தி வருகின்றனர் என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*