கடல் இல்லாத உத்திரபிரதேசத்தில் துறைமுகத்தை உருவாக்கினார் மோடி இப்போது தெரிகிறதா அருமை?

உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் மக்கள் தொகை கொண்ட மிக பெரிய மாநிலம் இருப்பினும் அங்கு தொழில்வளர்ச்சி என்பது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதே என்று கூறப்பட்டது, மேலும் பன்னாட்டு தொழிற்சாலைகள் போக்கு குவரத்து வசதி காரணமாக அம்மாநிலத்தில் தொழில் தொடங்காமல் இருந்து வந்தனர்.

Loading...

கொரானா மற்ற நாடுகளின் தொழில் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும்
அழித்து வரும் நேரத்தில் இந்தியாவுக்கு
எப்படியோ நல்ல காலம் பொறக்க வைக்க இருக்கிறது. அதிலும் குறிப்பாக உத்திர பிரதேசத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவ இருக்கிறது. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான சிஸ்கோ அடாப், ஹனிவெல், லாக்கீட் மார்ட்டின், பாஸ்டன் சயின்டிபிக், சரக்கு கப்பல்களை கையாலும் கார்கோ நிறுவனங்களான பெடெக்ஸ் மற்றும் யூபிஎஸ் அடுத்து தென் கொரியாவின் இரும்பு நிறுவனங்கள் ஹூண்டாய் ஸ்டீல், பாஸ்டன் ஸ்டீல் நிறுவனங்கள் உத்தர பிரதேசத்திற்கு வர பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெடெக்ஸ் யூபிஎஸ் நிறுவனங்கள் கப்பல்கள் மூலம் சரக்குகளை கொண்டு செல்லும் கார்கோ நிறுவனங்கள் . இவர்களுக்கு.கடல் இல்லாத உத்திரபிரதேசத்தில் என் ன வேலை இருக்கிறது என்று கேள்விகள் வரலாம்.

Loading...

உத்தரபிரதேசத்தில் கடல் இல்லை ஆனால் கங்கையை கடலாக்கி இருக்கிறார் மோடி அதோடு கடலே இல்லாத உத்தரபிரதேசத்தில் வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரையில் மல்டி மாடல் துறைமுகத்தை உருவாக்கிய பிறகு கப்பல்கள் வராமல் இருக்க முடியுமா?
இந்தியாவின் பிரதமர்களை உருவாக்கிய மாநிலம் என்று பெருமைபட்டு கொண்ட உத்தர பிரதேசம் இந்தியாவின் தொழில் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக வர முடியாமல் இருக்க முக்கிய காரணம்போக்குவரத்து வசதிகள் இல்லாததால்தான்.

அதிலும் கடல் வழிப்போக்கு வரத்து இல்லாத முக்கிய காரணமே உத்தரபிரதேசத்தில் தொழில் வளர்ச்சி இல்லாமல்போனது. மகாராஸ்டிரா குஜராத் தமிழ்நா டு ஆந்திரா மேற்கு வங்காளம் ஒடிசா மாநிலங்களில் துறைமுக வசதி இருப்பதால் அங்கெல்லாம் எட்டி பார்த்த தொழில் நிறுவனங்கள் உத்தரபிரதேசத்தை
எட்டி பார்க்க யோசித்து வந்தன.

ஒரு நல்லாட்சி இருந்தால் கடல் வழியாக அல்ல ஆற்றின் வழியாகவும் கன்டைய்னர்களை சரக்கு கப்பல்கள் மூலமாக கொ ண்டுவர முடியும் என்று கங்கையை கடலாக்கி மோடி காண்பித்த பிறகே உத்தர பிரதேசம் நோக்கி தொழில் நிறுவனங்கள் பார்வையை திருப்பி உள்ளன..உலகில் வளர்ந்த நாடுகள் எல்லாம் உள்நாட்டு போக்குவரத்துக்கு ஆறுகளின் வழியே ஏற்படுத்தப்பட்ட நீர்வழிச்சாலைகளையே பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியா நிலத்திலேயே சாலை அமைக்க முடியவில்லை. நீரில் எங்கே சாலை
அமைக்க முடியும் என்று யோசித்தது?

ஆனால் மோடி அரசு சாதித்தது மோடி
அரசு கிடப்பில் இருந்த 30 ஆண்டு தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை மூன்றே ஆண்டுகளில் நிறைவேற்றி சாதனை படைத்தது. நம் நாட்டில் குறைந்த செலவிலான போக்குவரத்திற்கு, நீர் வழிப் போக்குவரத்து மிகச் சிறந்தது.
அமெரிக்காவில் நடைபெறும் சரக்கு போக்குவரத்தில் 21 சதவீதம் உள்நாட்டு நீர் வழிச்சாலைகளின்வழியாக நடைபெறு கிறது.

சீனாவில் 47 சதவீதமும், கொரியா மற்றும் ஜப்பானில் 40 சதவீதமும் உள்நாட்டு நீர்வழிகளின் வாயிலாக சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தியாவிலோ 1 சதவீத அளவில் கூட உள்நாட்டு நீர் வழிச்சாலைகளின் வழியே சரக்கு போக்குவரத்து நடைபெற வில்லை. அது மட்டுமல்ல வளர்ந்த நாடுகளில் உள்ள ரோரோ போக்கு வரத்து பற்றி கூட அறிதல் இல்லா மலே இந்தியா இருந்தது .மோடி ஆட்சிக்கு வரும் வரை.

நம்நாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின்மொத்த நீர்ப்பரப்பு 15544 கிலோமீட்டர். இதனால் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கு ஏற்றதாகும். இதை எப்படியெல்லாம் போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம் என்று யோசித்த மோடி அர சு ஜல மார்க் யோஜனா என்கிற திட்டத் தை அறிவித்தது

இதன்படி தேசிய நீர்வழி ச்சாலை-1 என்கிற முடங்கி்இருந்த திட்டத்தை 5,369 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் கொடுத்து மோடி உத்தரபிரதேச ம் பீகார் ஜார்கண்ட் மேற்கு வங்காளம் வழியாக பாயும் கங்
கை நதியில் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்காளத்தி ன் ஹால்டியா இடையேயான 1,620 கி.மீ. நீளமுள்ள கங்கை நதி நீர் வழித்தடத்தை பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் ஆழமாக்கும் பணிகளை மேற்கொண்டார்

இதன் பிறகு தான் கங்கை நதியில் சரக்கு போக்குவரத்து ரோல் இன் ரோல்ஆப் அதாவது ரோரோ போக்கு வரத்து என்று கங்கை நதியிலே இந்தியாவின் முதல் நீர் வழிச்சாலை வழியாக 2018 நவம்பர் மாதம் போக்குவரத்தை துவங்கி வைத்தவர் மோடிஇந்தியாவின் முதல் தேசிய நீர்வழிச்சாலை வழியாக கொல்கத்தாவில் இருந்து கார்களை நிரப்பிக் கொண்டு 16 கன்டைய்னர்களை சுமந்து கொண்டு 2019 பிப்ரவரி மாதம் உலகின் நம்பர் 1சரக்கு கப்பல் கம்பெனியான டென்மார்க் நாட்டின் மேர்ஸ்க்கின் சரக்கு கப்பல் நுழைந்த பிறகு தான் உலகின் முன்னணி நிறுவனங்க ள் உத்தரபிரதேசத்தை எட்டி பார்க்க ஆரம்பித்தன.

அதிலும் இந்த ரோரோ போக்குவரத்து இருக்கிறது அல்லவா.அது மிக அருமையானது. கொல்கத்தாவில் இருந்து ஒருவர் காசிக்கு வந்து அங்கு திதி கொடுக்க வேண்டும்என்றால் சுமார் 700 கிலோ மீ ட்டர் தொலைவிற்கு NH-19 வழியாக குறைந்தது 12மணி நேரம் காரை ஓட்டிக் கொண்டு வரவேண்டும்.

ஆனால் இந்த ரோரோ சர்வீஸ் என்ன செய்கிறது என்றால் அவர் காரோடு கொல்கத்தா துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் ஏறி உட்கார்ந்து கொண்டால்போதும் கங்கை வழியாக வாரணாசிக்கு கொண்டுவந்து விட்டு விடுவார்கள்.

அவர் வாரணாசி துறைமுகத்தில் காரோடு இறங்கி காரியம் முடிந்த பிறகு வாரணாசியை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு அடுத்த கப்பலில் காரோடு ஏறி கொல்கத்தா போய்சேர்ந்து விடலாம்.
இப்படிகங்கை நதியை ஒரு கடலாக மாற்றி விட்டு தன்னை தேர்ந்தெடுத்த வார ணா சி தொகுதியை துறைமுக நகரமாக மோடி மாற்றிய பிறகு உத்தரபிரதேசத்தை தேடி வர ஆரம்பித்து விட்டன பன்னாட்டு நிறுவனங்கள். ( திரு விஜயகுமார்)

ஏன் பல கோடிகள் செலவு செய்து செயற்கையாக ஒரு நீர்வழிச்சாலையை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர் தற்போது அதற்கு கொரோனா அதற்கான விடையை கொடுத்துள்ளது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2645 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*