சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்! கிரிக்கெட் வாரியம அறிவித்த தண்டனை!

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்! கிரிக்கெட் வாரியம அறிவித்த தண்டனை!

Loading...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான் உமர் அக்மல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் உமர் அக்மல். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மலின் தம்பியுமாவார். கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக இவர் 2019 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பின் தேசிய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் பி சி எல் (பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்) தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இவருக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிக தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Loading...

அதற்குக் காரணமாக ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஊழல் சட்ட விதி 4.7. 1 ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால் மேற்கொண்டு விவரங்களை வெளியில் சொல்ல முடியாது என அறிவித்துள்ளது. 29 வயதாகும் உமர் அக்மல் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர். சில மாதங்களுக்கு முன் பயிற்சியாளரிடம் தகராறு செய்து சட்டையைக் கழட்டியதாக அவர் மேல் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் தரக்கோரி மார்ச் 31ம் தேதி வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் எந்த விளக்கமும் அளிக்காததால் அவருக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*