Connect with us

#24 Exclusive

இங்கிலாந்தை போன்று இந்தியாவிலும் வாக்கெடுப்பு நடத்த திட்டம், மோடி சொன்ன ட்ரைலர் இதுதான் !

பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது கூட்டம் ஒன்றில் பேசும்போது, CAA, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவை வெறும் சாம்பிள் தான் என்று கூறியிருந்தார், மேலும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அழுத்தம் தமக்கு கொடுக்கப்படுகின்றன என்றும் ஆனால் ஒருநாளும் குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மோடி இது வெறும் சாம்பிள்தான் என்று கூறிய சம்பவம் போராட்டக்காரர்களை சற்று அதிர செய்தது, நாடு காணாத அளவில் மோடிக்கு அழுத்தம் கொடுக்கலாம் என எண்ணி இருந்தால் இவரோ இது வெறும் சாம்பிள்தான் அதிர்ச்சி அடைய தேவையில்லை என குறிப்பிடுகிறாரே எனவும், வேறு என்ன சட்டம் வர போகிறது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

இந்நிலையில் மோடி அரசின் மிக பெரிய திட்டம் ஒன்று தற்போது மெல்ல கசிந்துள்ளது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலம் பிரிக்கப்படும் என்று முன்பே கூறிய அதே வட்டாரங்கள் இப்போது, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டுமா? வேண்டாமா என அந்நாட்டு மக்கள் இடையே பொது வாக்கெடுப்பு நடத்தியது அதில் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என வாக்களித்தார்கள்.

Loading...

இதை போன்றே மத்திய அரசு மிக முக்கியமான முடிவு ஒன்றிணை எடுத்துள்ளது அது இந்தியாவை செக்குலர் நாடு என்பதில் இருந்து மாற்றி இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கலாமா என வாக்கெடுப்பு நடத்த இருக்கிறது, இந்த வாக்கெடுப்பானது வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஐ நா சபை உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடத்த மோடி திட்டமிட்டுள்ளார்.

Loading...

இதற்கு இரண்டு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவது, செக்குலர் நாடாக இந்தியா இருப்பது பெருமை என்றாலும் அது இந்துக்களுக்கான நாடாக இல்லை என்ற அச்சம் எழுந்துள்ளது, தொடர்ந்து பல இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று மதமாற்றம் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இதே நிலை நீடித்தால் 2040 ஆண்டிற்குள் இந்தியா இந்துக்கள் பெரும்பான்மை நாடாக இருக்காது என்றும் அஞ்சுகிறது.

வருகின்றன மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 65-69% ஆகத்தான் இருக்கும் என்றும் அப்படி ஒரு முடிவு வந்தால் உடனடியாக மத்திய அரசு இந்தியாவை மதச்சாற்பற்றநாட்டில் இருந்து இந்து நாடாக அறிவிப்பது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறதாம், இதற்காகத்தான் இப்போதே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த கூடாது என சில எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக கூறப்படுகிறது.

வாக்கெடுப்பு நடத்தாமலும் மத்திய அரசால் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும், ஆனால் இதனை மக்கள் இடத்தில் எடுத்து செல்வதன் மூலம் பல்வேறு கட்சிகளில் பிரிந்து கிடக்கும் இந்துக்களுக்கு சில புரிதல்கள் உண்டாகும் என்றும் கணக்கிட்டுள்ளதாம், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மாற்றங்களும் வந்தால் அதனை உலக நாடுகளும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் அதிரடி திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

இந்த வாக்கெடுப்பு 2021 – ம் ஆண்டிற்கு முன்பு நடந்தால் நிச்சயம் இந்துக்கள் வாக்குகள் ஒன்றிணையும் என்பதால்தான் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து திமுக மிக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்து அதன் மூலம் மக்கள் தொகை பதிவேட்டினை தமிழகத்தில் நடைமுறை படுத்தாமல் காலம் தாழ்த்தலாம் என்றும் கணக்கிட்டுள்ளதாம்.

மோடி சொன்ன மெயின் பிக்ச்சர் இதுதானோ இப்படி ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றால் நிச்சயம் இந்தியாவில் மாற்றம் உண்டாகும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending