Connect with us

#24 Exclusive

அசிங்கமான பொம்மைகள் என்று பேசிய விசிக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது தெரியுமா?

சென்னை :- தமிழகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக ஊரக உள்ளாட்சிகளுக்கான நடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன, எந்த ஆண்டுகளும் இல்லாத அளவிற்கு தமிழக ஊடகங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக முடிவுகளை நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர், மேலும் விவாதங்கள் மூலம் களநிலவரங்களை பேசிவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தேனியை தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது, அதில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்டன இந்நிலையில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன, இதில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 24 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டது, ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது விடுதலை சிறுத்தைகள் ஒரு மாவட்ட கவுன்சிலர் தொகுதிகள் கூட முன்னிலை வகிக்கவில்லை..,

மாறாக தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று கூறிய நிலையில் இரண்டு மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து திருமாவளவன் இந்து கடவுள்கள் ஐயப்பன் குறித்தும், இந்து கோவில்கள் குறித்தும் கொச்சை படுத்தும் விதமாக பேசியது மக்கள் மனதில் எதிரொலித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன சமீபத்தில் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்று திருமாவளவன் கூறினார்,

Loading...

அதன் எதிரொலியாக தற்போதுவரை 2.15 மணி நிலவரப்படி விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் விவாதங்களில் பங்கேற்றுவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கோலம் போராட்டம் வெற்றிபெற்றதாக பேசிவருவதை குறிப்பிட்டு பலரும் இணையதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending