Connect with us

#24 Exclusive

உதயநிதி – ரஜினி ரசிகர்கள் மோதல் !! வீடியோவை ட்விட்டரில் பரப்பி பதிலடி

நேற்று துக்ளக் விழாவில் கலந்து கொண்டு ரஜினி பேசிய பேச்சு நேற்றில் இருந்து தற்போதுவரை திமுகவினரை சற்று இறுக்கமான மனநிலைக்கே கொண்டு சென்றுள்ளது எனலாம், முரசொலி வைத்திருந்தார் அவர் திமுக காரர், துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி எனலாம் என ரஜினிகாந்த் மேடையில் கூறினார், அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என தெரியவில்லை.

ஆனால் சமூகவலைத்தளங்களில் நேரடியாக அப்போ முரசொலி படிப்பவர்கள் அறிவாளிகள் இல்லையா என கேள்வி எழுப்ப பட்டது, இதை முரசொலியில் நிர்வாக இயக்குனராக உள்ள உதயநிதியிடமும் பலரும் கேள்வி எழுப்பினர், அதற்கு நேற்று மாலை மறைமுகமாக ரஜினியை விமர்சனம் செய்து இருந்தார்,

“முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்” இவ்வாறு உதயநிதி குறிப்பிட்டார், உதயநிதி இதற்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போரட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோது, வசதியான வயதானவர்களை பாதுகாப்பாக வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறு ரஜினியை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

Loading...

கால்பிடித்து காலம் கடத்தி என்று உதயநிதி விமர்சனம் செய்தது முதல் ரஜினி ரசிகர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் அக்கவுண்டை முற்றுகையிட்டு பதிலடி கொடுத்து வருகின்றன ர், ஒரு சிலர் உதயநிதி ரஜினி டீஷர்ட் போட்டு தலைவா என கூறியது, ஸ்டாலினுடன் சென்று ரஜினியை பார்த்தது, பல ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி பெயரை பயன்படுத்தி திமுகவினர் ஒட்டு கேட்டது, என பதிலடி கொடுத்தனர்.

Loading...

இவற்றிற்கு மேலாக உதயநிதி தாத்தா கருணாநிதி ரஜினியை யார் என்று குறிப்பிடும் வீடியோவை பகிர்ந்து இதை பார்த்துவிட்டு பேசவும் யார் யார் காலை பிடித்தது என கிண்டல் அடித்து வருகின்றனர்,

முரசொலி மூல பத்திரம் விவகாரமே இன்னும் முடியாத போது தற்போது முரசொலி படிப்பவர்கள் அறிவாளி இல்லையா என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

©TNNEWS24

Loading...

Trending